கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
காசி தமிழ்ச் சங்கமம் 5.0 · சுற்றறிக்கை

பொறுப்பு நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்

காசி தமிழ்ச் சங்கமம் 5.0-இன் மாணவர் ஈடுபாட்டுத் திட்டம் குறித்து, இந்திய அரசு, கல்வி அமைச்சகத்தின் 31-10-2026 நாளிட்ட அரைஅலுவல் கடிதத்தின் (D.O. No. 16-2/2026-Skt.I (Pt.)) முக்கியக் குறிப்புகள்.

பங்கேற்கும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு

நிலையான செயல்பாட்டு நடைமுறை, கடிதத்தின் இணைப்பு-V

  1. குழுவை அமைத்தல்: ஒவ்வொரு பொறுப்பு நிறுவனத்தின் தலைவரும் ஒரு மதிப்பீட்டுக் குழுவை அமைக்க வேண்டும்.
  2. குழுவின் உறுப்பினர்கள்: மாநில / யூனியன் பிரதேசப் பொறுப்பு அலுவலர் உட்படக் குறைந்தது மூன்று உறுப்பினர்களைக் குழு கொண்டிருக்க வேண்டும்.
  3. மதிப்பீட்டு நடைமுறை: தகுதியுள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் குழு மதிப்பீடு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறையின் பத்தி 3-இல் உள்ள அளவுகோல்கள், மதிப்பெண் அளவுருக்கள் ஆகியவற்றின்படி மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
  4. சான்றொப்பம்: குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மதிப்பீட்டுத் தாள்களில் கையொப்பமிட வேண்டும்.
  5. ஒப்புதல்: தேர்வுப் பட்டியலையும் காத்திருப்புப் பட்டியலையும் பொறுப்பு நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதலுக்குக் குழு பரிந்துரைக்க வேண்டும்.

தேர்வு அளவுகோல்கள் (பத்தி 3)

#தேர்வு அளவுகோல்கள் (பத்தி 3)அதிகபட்ச மதிப்பெண்கள்
1நிறுவன ஆயத்தநிலை20
2மாணவர்களைச் சென்றடைவதற்கான முன்மொழிவு20
3திருக்குறளுடனான கல்விசார் ஈடுபாடு20
4புவியியல் பிரதிநிதித்துவம்20
5நிறுவன, பாடத்துறைப் பன்முகத்தன்மை20

மொத்தம்: 100 மதிப்பெண்கள். பரிந்துரைக்கப்படும் தகுதி வரம்பு: 60 மதிப்பெண்கள்.

தகுதியுள்ள கல்வி நிறுவனங்களை மொத்த மதிப்பெண்களின் இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தி, இணைப்பு-I-இல் அந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கு வகுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்களை மட்டும், அந்த எண்ணிக்கையில் வழக்கமாக 20 விழுக்காடு வரையிலான காத்திருப்புப் பட்டியலுடன், தேர்வு செய்க.

பதிவு ஆவணங்கள், மதிப்பீட்டுத் தாள்கள், ஒப்புதல் பெற்ற தேர்வுப் பட்டியல், காத்திருப்புப் பட்டியல், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதலுக்கான சான்று ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க.

KTS 5.0 – முக்கிய நாள்கள்

பதிவும் தேர்வும்

  • 15-11-2026 வரைகல்வி நிறுவனங்கள் பதிவு செய்யக் கடைசி நாள்
  • 16-11-2026 – 17-11-2026பொறுப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்தல்
  • 19-11-2026-க்குள்பங்கேற்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் மதிப்பீடு நடத்துதல்
  • 20-11-2026பங்கேற்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதி அடிப்படையில் ஒரு மாணவரை CICT இணையதளத்தின் வழியாகப் பரிந்துரைக்கிறது

இணையவழி நிகழ்ச்சிகள்

  • 28-11-2026KTS 5.0 தொடக்க விழா
  • 12-12-2026KTS 5.0 நிறைவு விழா
  • எல்லாப் பொறுப்பு நிறுவனங்களும் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களும் இணையவழியில் இணைவர். இணைவதற்கான இணைப்புகள் தனியே பகிரப்படும்.
  • பங்கேற்பாளர்கள் அனைவரும் CICT-இடமிருந்து பங்கேற்புச் சான்றிதழ் பெறுவர்.

ஆய்வும் சமர்ப்பிப்பும்

  • 14-12-2026-க்குள்CICT வழங்கும் கல்விசார் அறிமுகப் பயிற்சியும் கற்றல் பொருளும்
  • 15-12-2026 – 14-01-2027ஒரு மாத ஆய்வு மற்றும் எழுத்துப் பணிக் காலம்
  • 14-01-2027-க்குள்ஆய்வுப் பணியையும் அறிக்கைகளையும் சமர்ப்பிக்கக் கடைசி நாள்

இணையதளத்தில்

ஐயங்கள் உள்ளனவா? kts@cict.in என்ற முகவரிக்கு எழுதுக அல்லது 044-22540125 என்ற எண்ணில் அழைக்கவும்.

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி