மாநிலம் / யூனியன் பிரதேச வாரியான பொறுப்பு உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு உயர்கல்வி நிறுவனமும் தன் மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவை இந்த இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்து, அவற்றின் மதிப்பீடுகள், பரிந்துரைகள், கல்லூரி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது.
| # | மாநிலம் / யூனியன் பிரதேசம் | பொறுப்பு உயர்கல்வி நிறுவனம் | பங்கேற்கும் உயர்கல்வி நிறுவனங்களின் உத்தேச எண்ணிக்கை (மத்திய/மாநில/தனியார் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்) |
இதுவரை பங்கேற்றுள்ள கல்வி நிறுவனங்கள் |
|---|---|---|---|---|
| 1 | ஆந்திரப் பிரதேசம் | Central University of Andhra Pradesh | 65 | 0 |
| 2 | அருணாச்சலப் பிரதேசம் | Rajiv Gandhi University | 15 | 0 |
| 3 | அசாம் | Assam University | 30 | 0 |
| 4 | பீகார் | Central University of South Bihar | 40 | 0 |
| 5 | சத்தீஸ்கர் | Guru Ghasidas Vishwavidyalaya | 30 | 0 |
| 6 | கோவா | NIT Goa | 15 | 0 |
| 7 | குஜராத் | Central University of Gujarat | 55 | 0 |
| 8 | ஹரியானா | Central University of Haryana | 45 | 0 |
| 9 | இமாச்சலப் பிரதேசம் | Central University of Himachal Pradesh | 20 | 0 |
| 10 | ஜார்க்கண்ட் | Central University of Jharkhand | 25 | 0 |
| 11 | கர்நாடகா | Central University of Karnataka | 75 | 0 |
| 12 | கேரளா | Central University of Kerala | 45 | 0 |
| 13 | மத்தியப் பிரதேசம் | Dr. Harisingh Gour Vishwavidyalaya | 55 | 0 |
| 14 | மகாராஷ்டிரா | Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya | 100 | 0 |
| 15 | மணிப்பூர் | Manipur University | 10 | 0 |
| 16 | மேகாலயா | North-Eastern Hill University | 10 | 0 |
| 17 | மிசோரம் | Mizoram University | 10 | 0 |
| 18 | நாகாலாந்து | Nagaland University | 10 | 0 |
| 19 | ஒடிசா | Central University of Odisha | 50 | 0 |
| 20 | பஞ்சாப் | Central University of Punjab | 45 | 0 |
| 21 | ராஜஸ்தான் | Central University of Rajasthan | 80 | 0 |
| 22 | சிக்கிம் | Sikkim University | 10 | 0 |
| 23 | தமிழ்நாடு | Central University of Tamil Nadu | 150 | 0 |
| 24 | தெலங்கானா | University of Hyderabad | 50 | 0 |
| 25 | திரிபுரா | Tripura University | 10 | 0 |
| 26 | உத்தரப் பிரதேசம் | Banaras Hindu University | 150 | 0 |
| 27 | உத்தரகாண்ட் | Hemvati Nandan Bahuguna Garhwal University | 25 | 0 |
| 28 | மேற்கு வங்காளம் | Visva-Bharati | 50 | 0 |
| 29 | தில்லி | University of Delhi | 75 | 0 |
| 30 | ஜம்மு காஷ்மீர் | Central University of Jammu | 25 | 0 |
| 31 | புதுச்சேரி | Pondicherry University | 10 | 0 |
| மொத்தம் | 1,385 | 0 | ||
மாநிலம் / யூனியன் பிரதேச வாரியான ஒதுக்கீடு உத்தேசமானது; அது அடையாளம் காணப்பட வேண்டிய பங்கேற்கும் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதல் உயர்கல்வி நிறுவனங்களையும் பொறுப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கலாம்.
திட்டம் நிறுவனங்களைச் சென்றடையும் முறை
பொறுப்பு நிறுவனம்
ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும், தனக்குள்ள தகுநிலையையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலையும் கருத்தில் கொண்டு, ஒரு உயர்கல்வி நிறுவனம் பொறுப்பு உயர்கல்வி நிறுவனமாக நியமிக்கப்படுகிறது. அது தன் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்குள், புவியியல் பரவலையும் நிறுவனப் பிரதிநிதித்துவத்தையும் கருத்தில் கொண்டு, 50 வரையிலான உயர்கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பங்கேற்பை ஒருங்கிணைக்கிறது. மூத்த அலுவலர் ஒருவரை மாநில / யூனியன் பிரதேசப் பொறுப்பு அலுவலராக நியமித்து, அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அனுப்பி, பரிந்துரையையும் பதிவையும் ஒருங்கிணைத்து, தகுதித் தேர்வுக்கும் அறிமுகப் பயிற்சிக்கும் வசதி செய்து, செயல்பாடுகள் உரிய காலத்தில் நிறைவடைவதைக் கண்காணிக்கிறது.
பரிந்துரையும் பதிவும்
பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனமும் திருக்குறள் குறித்து ஆர்வமுள்ள தன் மாணவர்களை மதிப்பீடு செய்து, தகுதி அடிப்படையில் ஒரு மாணவரைத் தேர்வு செய்து, ஒரு வழிகாட்டும் ஆசிரியருடன் அவரைப் பரிந்துரைக்கிறது. இந்தப் பரிந்துரை நிறுவனத்தின் இயக்குநர், பதிவாளர், முதல்வர் அல்லது தலைவரால் உறுதிப்படுத்தப்படுகிறது; தேர்வு செய்யப்பட்ட மாணவரை நிறுவனம் இந்த இணையதளத்தில் பதிவு செய்கிறது.
தெரிவு
நிறுவன அளவிலான மதிப்பீடுகளின் அடிப்படையிலும் வகுக்கப்பட்ட தெரிவு முறையின்படியும், மாநில வாரியாகவும் மொழி வாரியாகவும் உரிய பிரதிநிதித்துவத்துடன், 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்லூரி நிகழ்வுகளும் அறிக்கையும்
பங்கேற்கும் நிறுவனங்கள், மாணவர்களின் பரந்த ஈடுபாட்டிற்காக, கட்டுரைப் போட்டி, வினாடி வினா, பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, ஒப்புவித்தல், கதை சொல்லல், சுவரொட்டி உருவாக்கம், உரை நிகழ்த்துதல் போன்ற திருக்குறள் சார்ந்த கல்வி, பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்தலாம். நடத்தப்பட்ட நிகழ்வுகள் குறித்த சுருக்கமான அறிக்கை, வகுக்கப்பட்ட படிவத்தில் CICT-க்கும் அமைச்சகத்திற்கும் சமர்ப்பிக்கப்படுகிறது.



