பயன்பாட்டு விதிமுறைகள்
kts.cict.in என்னும் இந்த இணையதளத்தை, காசி தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம் திட்டத்திற்காக, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை வடிவமைத்து, உருவாக்கி, இணையத்தில் வழங்கிப் பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
உள்ளடக்கம்
இந்த இணையதளத்தின் உள்ளடக்கத்தைத் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் வைத்திருக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இதனைச் சட்டத்தின் கூற்றாகக் கொள்ளவோ, எந்தவொரு சட்ட நோக்கத்திற்கும் பயன்படுத்தவோ கூடாது. இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள், நாள்கள், முடிவுகள், பட்டியல்கள் ஆகியவையே இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஆகும். ஏதேனும் ஐயமோ முரண்பாடோ ஏற்பட்டால் CICT-இன் முடிவே இறுதியானது; பயனர்கள் எந்தத் தகவலையும் CICT-இன் உதவி மையத்திடம் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் இடைமுகம் 23 மொழிகளில் வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கும் ஆங்கில வடிவத்திற்கும் இடையே வேறுபாடு இருப்பின், ஆங்கில வடிவமே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
இணையதளப் பயன்பாடு
- ஒவ்வொரு விண்ணப்பதாரரும் உண்மையான, முழுமையான தகவல்களையும் ஆவணங்களையும் அளிக்க வேண்டும். தவறான தகவல்களைக் கொண்ட விண்ணப்பமோ, ஒரே மாணவரின் இரண்டாவது விண்ணப்பமோ எந்த நிலையிலும் ரத்து செய்யப்படலாம்.
- ஒரு விண்ணப்பத்தின் நுழைவு விவரங்கள் அந்த மாணவருக்கு மட்டுமே உரியவை. மற்றொருவருக்காக இணையவழித் தேர்வை எழுதுவதும், அவ்வாறு செய்ய ஒருவருக்கு உதவுவதும் முறைகேடு ஆகும்.
- இந்த இணையதளத்தின் பாதுகாப்பை உடைக்க முயல்வதும், தமக்கு உரியதல்லாத தரவுகளைப் படிக்க முயல்வதும், தானியங்கிக் கோரிக்கைகளால் இணையதளத்திற்கு மிகையான சுமையை ஏற்படுத்துவதும் அனுமதிக்கப்படுவதில்லை; இவை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படலாம்.
- எவ்வகை முறைகேடும் விண்ணப்பம் ரத்து செய்யப்பட வழிவகுக்கும்.
பொறுப்பு
இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதனால் அல்லது அதனோடு தொடர்புடைய வகையில் எழும் எந்தச் செலவு, இழப்பு அல்லது சேதத்திற்கும் – மறைமுகமாகவோ அதன் விளைவாகவோ ஏற்படும் இழப்பு அல்லது சேதம் உட்பட, ஆனால் அவற்றுக்கு மட்டும் வரம்பின்றி – மற்றும் தரவைப் பயன்படுத்துவதாலோ அதனைப் பயன்படுத்த இயலாமல் போவதாலோ எழும் எவ்வகைச் செலவு, இழப்பு அல்லது சேதத்திற்கும் எந்தச் சூழ்நிலையிலும் CICT பொறுப்பாகாது.
பிற இணையதளங்களுக்கான இணைப்புகள்
இந்த இணையதளம், பங்கேற்பு நிறுவனங்களின் இணையதளங்கள், YouTube-இல் உள்ள CICT-இன் காணொளிகள் போன்ற பிற இணையதளங்களுக்கு இணைப்புகளைத் தருகிறது. அவற்றின் உள்ளடக்கத்திற்கோ அவை கிடைப்பதற்கோ CICT பொறுப்பாகாது. விவரங்களுக்கு இணைப்புக் கொள்கை பக்கத்தைக் காண்க.
சட்டமும் அதிகார வரம்பும்
இவ்விதிமுறைகள் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டவை. இவற்றின் கீழ் எழும் எந்தப் பிணக்கும் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும்.
மாற்றங்கள்
CICT இவ்விதிமுறைகளை மாற்றலாம். இந்த இணையதளம் கடைசியாக மாற்றப்பட்ட நாள் கீழே காட்டப்பட்டுள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 09-10-2026



