Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous
102. நாணுடைமை · Shame
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
நல்லவர் நாணுப் பிற.
நன்மக்கள் நாணுவது இழிந்த செயல் காரணமாக நாணுதல் ஆகும். அதல்லாமல் மனம், மொழி, மெய் ஆகியவற்றின் ஒடுக்கத்தால் வருவன அழகிய நுதலுடைய குலமகளிர் நாணுவன.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
நன்மை குறித்தது சால்பு.
உயிர்களெல்லாம் உடலை நிலைக்களனாகக் கொண்டவை; அதுபோலச் சால்பு என்பது நாண் என்னும் நல்ல பண்பை நிலைக்களனாகக்கொண்டு அதனை விடாது.
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
பிணிஅன்றோ பீடு நடை.
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாகும்; அந்த அணிகலன் இல்லையேல், அவரது பெருமிதத்தை உடைய நடை, கண்டவர்க்குப் பிணியாகும்.
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
உறைபதி என்னும் உலகு.
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒன்றாகக் கருதி நாணம் அடைவாரை உலகத்தார் நாணத்திற்கு உறைவிடமென்று பாராட்டுவர்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
பேணலர் மேலா யவர்.
சான்றோர் தமக்குப் பாதுகாவலாக நாணத்தைக் கொள்வாரேயன்றி அகன்ற உலகத்தைக் காவலாகக்கொள்ள விரும்பமாட்டார்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
நாண்துறவார் நாணாள் பவர்.
நாணத்தை விடாது ஒழுகும் சான்றோர், நாணும் உயிரும் முரண்படும்போது நாணம் அழியாமலிருக்க உயிரை விடுவர்; உயிர் அழியாமலிருக்க நாணத்தை விடமாட்டார்.
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
அறம்நாணத் தக்கது உடைத்து.
பிறர் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமானால், அது அறம் அவனிடம் இருக்க நாணம்கொண்டு அவனைவிட்டு நீங்கும் தன்மையுடையதாகும்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
நாணின்மை நின்றக் கடை.
ஒருவனுக்கு ஒழுக்கம் தவறுமாயின் அது அவன் குடிப்பிறப்பைக் கெடுக்கும்; ஒருவனிடம் நாணமின்மை நிலைத்துநின்றால், அது அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
நாணால் உயிர்மருட்டி அற்று.
தம் மனத்தில் நாணமில்லாதார் உயிருடையவர்போல் இயங்குகின்ற இயக்கம் மரத்தால் செய்யப்பட்ட பாவை கயிற்றினாலாகிய இயக்கத்தால் உயிருடையதாக மயக்குவதுபோலும்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



