Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

← PreviousNext →
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous

108. கயமை · Baseness

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
உருவத்தில் முழுவதும் மக்களைக் கயவர் ஒத்திருப்பர்; இத்தகைய ஒப்பினை யாம் வேறெங்கும் கண்டதில்லை.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
தமக்கு உறுதியானவற்றை அறிபவர்களில் அவற்றை அறியாத கயவர்கள் நன்மை உடையராவர். ஏனெனில், அவர்கள் அதுபற்றித் தம் நெஞ்சில் கவலைகொள்ளாதவராவர்.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
கயவர் தேவரையொத்த தன்மையர்; ஏனெனில், தேவரைப்போன்று, கயவரும் கேட்பார் யாருமின்றித் தாம் விரும்புவன யாவற்றையும் செய்து ஒழுகுவார்.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
கீழோர் தம்மிலும் குறைந்தபடியாய் ஒழுகுவாரைக் கண்டால் அவ்வொழுக்கத்தில் தாம் அவரினும் மேம்பட்டு, அதனால், தம் உயர்வைக்காட்டி இறுமாப்படைவர்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
கயவரிடம் நல்லொழுக்கம் காணப்படுமாயின் அதற்குக் காரணம் அரசரால் தமக்குத் துன்பம் நேருமென்னும் அச்சமே. அதைத்தவிர, தம்மால் விரும்பப்படும் பொருள் கிடைக்குமாயின் அதனால் சிறிது உண்டாகும்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
தாம் கேட்ட மறைகளைப் பல இடங்களுக்குக் கொண்டுசென்று, பிறர்க்குச் சொல்லுவதால் கயவர், அறையப்படும் பறையினை ஒத்தவராவர்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
தம் கொடிறு உடைக்கும் முறுக்கிய கையினை உடையவர் அல்லாதார்க்குக் கயவர் தாம் உண்டு கழுவிய கையைத் தெறித்தலும் செய்யார்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
வறியவர் சென்று தம்குறையைச் சொல்லியவுடன் மேலோர் இரக்கம்கொண்டு உள்ளது கொடுப்பார்; கரும்புபோல வலியவர் நைய நெருக்கினால்தான் கீழோர் உள்ளது கொடுப்பார்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
பிறர் செல்வச்செழிப்பால் பட்டும் துகிலும் உடுத்தலையும், பாலோடு உணவு உண்டலையும் கீழோர் காணுமானால் அவற்றைப் பொறாமல், அவரிடம் பழி இல்லாதபோதும் அதனை உண்டாக்கவல்லவராம்.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
கயவர் ஏதாவதொரு துன்பம் அடையும்போது அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மை விற்றற்கு உரியர். அதுவல்லாமல் வேறு எத்தொழிலுக்கு அவர் உரியராவர்? கயவர் எத்தொழிலுக்கும் உரியவர் அல்லர்.

Chapters

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education
Implemented by Central Institute of Classical Tamil
In association with Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti