Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love
115. அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
பலரறியார் பாக்கியத் தால்.
இப்பெண்ணோடு எனது நட்பு ஊரில் அலராய் எழுதலால் அவளைப்பெறாது துன்புறுகின்ற என் அரிய உயிர் அவளை அடைந்ததுபோன்று நிலைத்துநிற்கும். அவ்வாறு என் உயிர் நிலைத்துநிற்பதை எங்கள் நல்வினைப் பயனால் பலரும் அறியமாட்டார்.
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
மலர்போலும் கண்ணையுடைய இப்பெண்ணின் பெருமை தெரியாது, அவளோடு அலர்கூறுதல்மூலம் இவ்வூர் எனக்கு உதவிசெய்தது.
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
எனக்கும் இப்பெண்ணுக்கும் உள்ள உறவுபற்றி இவ்வூர் அறிதலால் விளைந்த அலர் எனக்குச் செய்த நன்மை ஒன்றோ? அதுகேட்ட என் மனம் அவளோடு கூடுவதைப் பெறாதிருந்தே பெற்றதுபோலும் இன்பத்தை உடையதாயிற்று.
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
தவ்வென்னும் தன்மை இழந்து.
இவ்வூர் பரப்பும் அலரால் என் காமம் மேலும் மேலும் பெருகுவதாயிற்று. அந்த அலர் இல்லையானால் என் காமம் தன் தன்மையிழந்து இன்பம்தராது சுருங்கும்.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
வெளிப்படுந் தோறும் இனிது.
கள் உண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாகும்; அதுபோல, எனக்குக் காமம் அலரால் வெளிப்படுந்தோறும் இனிதாகின்றது.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
திங்களைப் பாம்புகொண் டற்று.
நான் காதலரைப் பார்த்தது ஒருமுறையே; அதனால் தோன்றிய அலர் அவ்வளவோடு இல்லாமல் திங்களைப் பாம்பு விழுங்கிய செய்திபோன்று உலகெங்கும் பரவியது.
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
நீராக நீளும்இந் நோய்.
என் காமநோயாகிய பயிர் இவ்வூரார் தூற்றுகின்ற அலர் எருவாக, அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராக, வளர்கின்றது. அலரும் அன்னை சொல்லும் என் காமத்தைச் சுருக்காமல் பெருக்குகின்றன.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
காமம் நுதுப்பேம் எனல்.
ஊரார் தூற்றும் அலரால் நாம் காமத்தை அவித்துவிடுவோம் என்று எண்ணுதல் நெய்யால் நெருப்பை அவித்துவிடுவோம் என்று எண்ணுதலை ஒக்கும்.
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
பலர்நாண நீத்தக் கடை.
அவரைக் கண்டபோது, ‘உன்னிடமிருந்து பிரியேன்; நீ அஞ்சாதிரு’ என்று சொன்ன காதலர் இன்று கண்டார் பலரும் நாணும்வண்ணம் என்னைத் துறந்தபிறகு, நான் ஊரார் கூறும் அலருக்கு நாணுதல் இயலுமா? இயலாது.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
கெளவை எடுக்கும்இவ் வூர்.
உடன்போக்கிற்கு ஏதுவாகும் என்பதால் நான் முன்னமேயே விரும்பிய அலரை இவ்வூர் தானே பரப்புகின்றது. இனி நான் வேண்டியபோது காதலர் அதனை ஈவார். அதனால், இவ்வூரலர் எனக்கு நன்மையே செய்துள்ளது.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



