शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्री शास्त्री तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केंद्री शास्त्री तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
इंटरफेस दा एह् अनुवाद इक मसौदा ऐ ते CICT आसेआ इसदी समीक्षा कीती जा करदी ऐ। English
बापस
अनुवाद

22 भाशाएं च तिरुक्कुरल

सारे 1,330 कुरल, अट्ठमीं अनुसूची दियें भाशाएं च CICT दे अनुवादें समेत। ध्याऽ ते भाशा चुनो।

तिरुक्कुरल अध्ययन साथी कोला पुच्छो →

← पिछलाअगला →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

121. நினைந்தவர் புலம்பல் · Sad Memories

तमिल पाठ कंप्यूटर दी आवाज च पढ़ेआ जंदा ऐ।
1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
முன் கூடியபோது பெற்ற இன்பத்தினைப் பிரிந்திருக்கும்போது நினைத்தாலும் முன் பெற்றாற் போன்ற மிக்க மகிழ்ச்சியைத் தருவதால், உண்ணும்போதுமட்டும் மகிழ்ச்சிதரும் கள்ளைக் காட்டிலும் காமம் இனிது.
1202
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று இல்.
தம்மால் காதலிக்கப்படுவோரைப் பிரிந்திருக்கும்போது நினைத்தாலும் அப்பிரிவால் வரும் துன்பம் இல்லாமல்போகும்; அதனால், காமம் எவ்வளவினதேனும் இன்பமே தருவதாம்.
1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
எனக்குத் தும்மல் வருவதுபோலத்தோன்றி வராது; ஆதலால், காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாதவராதல் வேண்டும்.
1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துஓஒ உளரே அவர்.
என்னுடைய நெஞ்சத்தில் அவர் எப்போதும் உள்ளார். அவ்வகையில் அவருடைய நெஞ்சத்தில் நானும் இருக்கின்றேனா, இல்லையா?
1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.
அவருடைய நெஞ்சில் நான் செல்லாமல் என்னைக் காக்கும் காதலர் அவர் என்னுடைய நெஞ்சில் ஒழியாது வருதல் பற்றி நாணம் அடையமாட்டாரா?
1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்உற்றநாள் உள்ள உளேன்.
நான் அவரொடு கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைத்தலால் இத்துன்பம் மிகுந்த காலத்தும் உயிர்வாழ்கின்றேன். அது இல்லையானால் நான் வேறு எவ்வாறு உயிர்வாழ்வேன்?
1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.
அவரோடு கூடித்துய்த்த இன்பத்தை மறக்க இயலாதவளாய் இன்று நினைத்தாலும் பிரிவு என் உள்ளத்தைச் சுடுகின்றது. பிரிவாற்ற முடியாத நான் அவ்வின்பத்தை மறந்தால் எவ்வாறு உயிர்வாழ்வேன்?
1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
அவரை நான் எவ்வளவு மிக நினைத்தாலும் அதற்கு அவர் சினம் கொள்ளமாட்டார். காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு அவ்வளவினதாகும்.
1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.
திங்களே, நீ வாழ்வாயாக! என் நெஞ்சில் இடைவிடாது இருந்துவிட்டுப் பிரிந்துபோன காதலரை நான் என் கண்ணளவாயினும் காணும் வகையில் நீ மறையாதிருப்பாயாக.

ध्याऽ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

अनुवाद © केंद्री शास्त्री तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाशी ऐप दे रूप च बी उपलब्ध

पैह्लकदमी Government of India शिक्षा मंत्रालय, भारत सरकार
लागू करने आह्ला केंद्री शास्त्री तमिल संस्थान (CICT), चेन्नई