ترجمہٕ
22 زَبانَن منٛز تِرُکُّرَل
سٲری 1,330 شعر، أٹھِمہِ شیڈیوٗلٕچَن زَبانَن منٛز CICT سٕنٛدؠو ترجمَو سان۔ باب تہٕ زَبان ژٲرِو۔
تِرُکُّرَل مُطالعٲتی ساتھِس پۄچھِو ←
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love
129. புணர்ச்சி விதும்பல் · Desire for Reunion
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
நினைத்த அளவில் களிப்பெய்தலும், கண்டவுடன் மகிழ்ச்சி அடைதலும் கள்ளுண்டவர்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.
காமம் பனையளவினும் மிக உண்டாகுமானால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டும்.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.
என்னை அவமதித்துத் தான் விரும்பியதையே செய்வானானாலும் கொண்கனை என் கண்கள் காணாது அமைதி அடைவதில்லை.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் னெஞ்சு.
தோழி! அவரோடு ஊடவேண்டுமென்று சென்றேன்; ஆனால், அதனை மறந்து என் நெஞ்சு கூடுதலை விரும்பியது.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.
முன்பு பார்த்திருந்தும் எழுதும்போது அஞ்சனக்கோலின் இயல்பு காணாத கண்களைப் போன்று, கொண்கனைக் கண்டபோது அவனது தவறு காணமாட்டேன்.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.
கொண்கனை நான் பார்க்கும்போது அவன் தவறுகளைக் காண்கிலேன்; கொண்கனைக் காணாதபொழுது தவறுகளைத்தவிர மற்றவற்றைக் காண்கிலேன்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.
தம்மை இழுத்துக்கொண்டு போதலை அறிந்து ஆற்றுநீரில் பாய்வார் செயல்போல, புலவி முடிவு போகாமையை அறிந்து கொண்கனோடு புலத்தலால் என்ன பயன்?
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.
வஞ்ச நெஞ்சுடையவனே, தன்னை உண்டு களித்தவர்க்கு இழிவை உண்டாக்கும் இன்னாதனவற்றைச் செய்தாலும் அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது உன்மார்பு.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.
காம இன்பம் மலரினும் மென்மையானது; அவ்வாறு அதன் மென்மையை அறிந்து அதன் இன்பத்தைப்பெறுவார் உலகில் சிலரேயாவர்.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.
முன்னொருசமயம் காதலி என்னோடு தன் கண்களால் மட்டும் ஊடி, அணைத்தலை என்னைவிட அவள் விரும்பலால் ஊடலை மறந்து என்னோடு கூடிவிட்டாள்.
اَبواب
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0 · تِرُکُّرَل کثیٖر لِسٲنی ایپ رٔنگؠ تہِ دستیاب





