शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
वापस
अनुवाद

22 भाषाओं में तिरुक्कुरल

आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।

तिरुक्कुरल अध्ययन साथी से पूछें →

← पिछलाअगला →
அறத்துப்பால் · Virtue › பாயிரவியல் · Prologue

3. நீத்தார் பெருமை · The Greatness of Ascetics

तमिल पाठ कंप्यूटर की आवाज़ में पढ़ा जाता है।
21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.
நல்லொழுக்கத்தில் நிலைத்துநின்று துறந்தவர்களது சிறப்பு, உயர்ந்த பொருள்கள் யாவற்றிலும் இதுவே உயர்ந்ததென்று வேண்டும் நூல்களின் முடிவாகும்.
22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறவியரின் பெருமையை இவ்வளவினது என்று எண்ணால் கூறமுயல்வது, இவ்வுலகில் பிறந்து இறத்தவர்களின் எண்ணிக்கையை அறியமுயல்வது போலாம்.
23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு.
இம்மை, மறுமை என்னும் இரண்டின் இன்பதுன்பக் கூறுகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவறம் மேற்கொண்டவரது பெருமையே உலகில் உயர்ந்தது. அரசர் முதலானோர் பெருமையைக் காட்டிலும் துறவியர் பெருமையே மேலானது.
24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
மனவுறுதி என்னும் பாகனது தோட்டியால், யானைகளாகிய ஐம்பொறிகளையும் அவற்றின் புலன்களின்வழிச் செல்லவிடாது காப்பவன், வீடுபேறாகிய நிலத்திற்கு ஒரு நல்ல விதையாகுவான்.
25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐம்புலன்களின் தன்மையை ஆராய்ந்தறிய வல்லவன் இடத்ததே உலகமாகும்.
28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
நிறைந்த மொழியினையுடைய துறவிகளின் உயர்வை, நிலவுலகில் அவரது ஆணையாகச் சொல்லப்பட்ட மந்திரங்களே தெளிவாகக் காட்டும்.
29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.
நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.
30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லாவுயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சொல்லப்படுபவர் துறவியராவர்.

अध्याय

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध

पहल Government of India शिक्षा मंत्रालय, भारत सरकार
कार्यान्वयन केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई