Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
Ask the Thirukkural study companion →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
74. நாடு · The Land
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.
அளவற்ற பொருளைப் பெற்றதால் யாவராலும் விரும்பத்தக்கதாய், எத்தகைய கேடுமின்றி மிக விளைவதே நாடாகும்.
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.
மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிவுசெய்யும் பகையும் இல்லாமல் இனிதாக நடப்பதே நாடாகும்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு.
பலவகைப்பட்ட மாறுபாடுகள்கொண்ட குழுவினரும், உடனிருந்தே அழிவுசெய்யும் உட்பகையும், வேந்தனுக்குத் தொல்லைதரும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாகும்.
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.
பகைவரால் எக்கேடும் அறியாததாய், அவ்வாறு கேடு நிகழ்ந்தபோதும் தன் வளம் குறையாததையே நாடுகளிலெல்லாம் சிறந்த நாடென்று நூலோர் சொல்வர்.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
கீழ்நீர், மேல்நீர் என்று சொல்லப்பட்ட இருவகை நீரும், வாய்ப்புடைத்தாய மலையும், அதிலிருந்து வரும் நீரும், அழியாத அரணும் நாட்டிற்கு உறுப்புகளாம்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் ஆகிய ஐந்தையும் நாட்டிற்கு அழகென்று சொல்வர்.
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.
நாட்டில் வாழ்வார் தேடி வருந்தாமல் அவரிடம் தானே அடையும் செல்வத்தை உடைய நாட்டையே நாடென்று நூலோர் குறிப்பர். நாட்டில் வாழ்வார் தேடி வருந்தச் செல்வம் தரும் நாடு நாடாகாது.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.
குடிகளின் அன்பைப்பெற்றவனும் அவர்கள்பால் அருள் உடையவனுமாகிய வேந்தனைப் பெறாத நாடு பிற நலன்களை எல்லாம் உடையதாயினும் அவற்றால் பயன் அடையாது.
Chapters
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App





