अणकार
22 भासांनी तिरुक्कुरल
आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue
8. அன்புடைமை · The Possession of Love
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? தம்மால் அன்பு செய்யப்பட்டவர்களது துன்பத்தைக் காணும்போது அன்புடையார் பொழியும் கண்ணீர் உள்ளிருக்கும் அன்பை எல்லாரும் அறியத் தெரிவிக்கும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்பும் உரியர் பிறர்க்கு.
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
என்போடு இயைந்த தொடர்பு.
பெறுதற்கரிய உயிருக்கு உடம்போடு ஏற்பட்ட தொடர்பு, அன்போடு பொருந்துதற்கு விளைந்த நெறியின் பயன் என்று அறிந்தோர் கூறுவர்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
ஒருவனுக்கு உறவினரிடம் கொள்ளும் அன்பு அத்தன்மையால் பிறரிடமும் விருப்பம் உடைமையைத் தரும்; அவ்விருப்பம்தான் அவனுக்குப் பகைவர் யாரும் இல்லையாய், யாவரும் நண்பரென்று சொல்லப்படும் அளவில்லாச் சிறப்பினைத் தரும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
இவ்வுலக இல்வாழ்க்கையில் இன்பம் நுகர்வார் அடையும் சிறப்பு, அன்புடையராய் இல்லறம் நடத்தும் வாழ்வின் பயனென்று அறிவுடையார் சொல்வர்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
மறத்திற்கும் அஃதே துணை.
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்வார், மறத்திற்கும் அவ்வன்பே துணையாகும் என்பதை அறியார்.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
அன்பி லதனை அறம்.
என்பில்லாத உடம்பை வெயில் துன்புறுத்தல் போன்று, அன்பில்லாத உயிரை அறம் துன்புறுத்தும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பில்லாத உயிர் வாழும் இல்வாழ்க்கை, பாலை நிலத்தில் வற்றலாகிய மரம் தளிர்த்தாற்போன்றது.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு, புறத்துறுப்புகள் எல்லாம் என்ன உதவியைச் செய்யும்?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பின் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பற்றவர்க்கு உள்ளது என்பைத் தோலால் போர்த்திய உடம்பாகும்; அது உயிரற்றது.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध



