Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

← PreviousNext →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

92. வரைவின் மகளிர் · Wanton Women

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
ஒருவனை அன்பு காரணமாக விரும்பாமல் பொருள் காரணமாக விரும்பும் மகளிரின் இனிய பேச்சு அவனுக்குப் பின்னால் துன்பத்தையே தரும்.
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
ஒருவனிடம் உள்ள செல்வத்தை அளந்தறிந்து அதனை அடையும் வரையிலும் தம் பண்புடைமை பற்றிப் பேசும் பண்பற்ற மகளிரது நடத்தையை ஆராய்ந்தறிந்து அவரைச் சேராது விடுதல் வேண்டும்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.
பொருளையே விரும்பும் பொதுமகளிரது பொய்ம்மையுடைய தழுவல் பிணமெடுப்பார் இருட்டறையில் முன்னறியாத பிணத்தைத் தழுவுதலை ஒத்தது.
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
பொருளையே விரும்பும் மகளிரது இழிந்தார்க்கே உரிய நலத்தை, அருளொடுகூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவுடையார் தீண்டமாட்டார்.
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இயற்கையாகப்பெற்ற மதிநலத்தோடு மாட்சிமைப்பட்ட கல்வியறிவும் உடையவர் பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாகிய ஆசையை உடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டமாட்டார்.
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
ஆடல், பாடல், அழகு ஆகியவற்றால் செருக்குற்றுத் தம் புல்லிய நலத்தைப் பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தரும் மகளிர் தோளை அறிவு ஒழுக்கங்களாலாகிய தம் புகழைப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டமாட்டார்.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
நெஞ்சினால் பிறவற்றில் ஆசைகொண்டு அவை காரணமாகப் பொருள் கொடுப்பாரை உடலால் புணரும் மகளிர் தோள்களை நிறையால் திருந்திய நெஞ்சம் அற்றவரே தீண்டுவர்.
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
உருவம், சொல், செயல்களால் வஞ்சிக்கும் மகளிரது தழுவலை அவ்வஞ்சனையை ஆராய்ந்தறியும் அறிவு அற்றவர்க்கு அணங்கு தீண்டுதல் என்று நூலோர் கூறுவர்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
உயர்ந்தோர் இழிந்தோர் என்ற வரைவு இல்லாமல் பொருள் கொடுப்பார் யாவரையும் தழுவும் மகளிரது மெல்லிய தோள்கள், அக்குற்றத்தை அறியும் திறனற்ற கீழ்மக்கள் அழுந்தும் நரகமாகும்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
கள்ளமனமுடைய பெண்களும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும் திருமகளால் விலக்கப் பட்டவருடைய நட்பாகும்.

Chapters

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education
Implemented by Central Institute of Classical Tamil
In association with Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti