கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 40. கல்வி

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.
    Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku · Maatalla Matrai Yavai
    தமிழ் உரை

    கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.

  2. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.
    Orumaikkan Thaan Katra Kalvi · Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu
    தமிழ் உரை

    ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.

  3. தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.
    Thaamin Puruvadhu Ulakin Purak · Kantu Kaamuruvar Katrarin Thaar
    தமிழ் உரை

    தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.

  4. கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.
    Karka Kasatarak Karpavai Katrapin · Nirka Adharkuth Thaka
    தமிழ் உரை

    கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.

  5. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.
    Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk · Katranaith Thoorum Arivu
    தமிழ் உரை

    மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.

  6. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.
    Kannutaiyar Enpavar Katror Mukaththirantu · Punnutaiyar Kallaa Thavar
    தமிழ் உரை

    கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.

  7. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.
    Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar · Kataiyare Kallaa Thavar
    தமிழ் உரை

    செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.

  8. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum · Kannenpa Vaazhum Uyirkku
    தமிழ் உரை

    எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

  9. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.
    Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan · Saandhunaiyung Kallaadha Vaaru
    தமிழ் உரை

    கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?

  10. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.
    Uvappath Thalaikkooti Ullap Piridhal · Anaiththe Pulavar Thozhil
    தமிழ் உரை

    யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.

  11. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.
    Katrarindhaar Kalvi Vilangum Kasatarach · Choldheridhal Vallaar Akaththu
    தமிழ் உரை

    குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.

  12. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
    Utaiselvam Oonoli Kalviendru Aindhum · Ataiyaavaam Aayang Kolin
    தமிழ் உரை

    ஒருவன் சூதினைத் தனக்குத் தொழிலாக விரும்புவானானால், உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் அவனை அடையா.

  13. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
    Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum · Katraar Anaiththilar Paatu
    தமிழ் உரை

    கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.

  14. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவர்க்கு.
    Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum · Neengaa Nilanaal Pavarkku
    தமிழ் உரை

    நிலத்தினை ஆளும் அரசனுக்கு அச்செயல்களில் விரைவுடைமை, கல்வியுடைமை, ஆண்மையுடைமை ஆகிய மூன்றும் ஒருபோதும் நீங்கா.

  15. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
    Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhu
    தமிழ் உரை

    உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.

  16. அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.
    Arivuru Vaaraaindha Kalviim Moondran · Serivutaiyaan Selka Vinaikku
    தமிழ் உரை

    அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பலராலும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் எனும் மூன்றையும் ஒருங்கே உடையவன் வேற்று வேந்தரிடம் தூது செல்லுதற்குத் தகுதி உடையவன் ஆவான்.

  17. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
    Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum · Illaadhaal Penkaamur Ratru
    தமிழ் உரை

    கல்வியறிவற்றவன் ஓர் அவையில் ஒன்று பேச விரும்புதல் முலைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை அடைய விரும்பினால்போன்றது.

  18. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
    Kallaa Thavarum Naninallar Katraarmun · Sollaa Thirukkap Perin
    தமிழ் உரை

    கற்றார் அவையில் ஒன்றையும் பேசாதிருப்பரேல் கல்வியறிவு அற்றாரும் மிக நல்லவராவர்.

  19. உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
    Ularennum Maaththiraiyar Allaal Payavaak · Kalaranaiyar Kallaa Thavar
    தமிழ் உரை

    கல்வியறிவற்றார் பிறரால் பார்க்கப்படுவதால் உயிரோடு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவர். அவ்வளவினராதல் அல்லாமல் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர்நிலம் போன்றவராவர்.

  20. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
    Nallaarkan Patta Varumaiyin Innaadhe · Kallaarkan Patta Thiru
    தமிழ் உரை

    நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் …”

    1. மாடல்ல மற்றை யவை.
    2. காமுறுவர் கற்றறிந் தார்.
    3. கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    4. கற்றனைத் தூறும் அறிவு.
    விடை

    D · கற்றனைத் தூறும் அறிவு. · குறள் 396

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு …”

    1. சாந்துணையுங் கல்லாத வாறு.
    2. காமுறுவர் கற்றறிந் தார்.
    3. மாடல்ல மற்றை யவை.
    4. கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    விடை

    B · காமுறுவர் கற்றறிந் தார். · குறள் 399

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு …”

    1. எழுமையும் ஏமாப் புடைத்து.
    2. காமுறுவர் கற்றறிந் தார்.
    3. சாந்துணையுங் கல்லாத வாறு.
    4. கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    விடை

    A · எழுமையும் ஏமாப் புடைத்து. · குறள் 398

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி