திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 9. விருந்தோம்பல்
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.Utaimaiyul Inmai Virundhompal Ompaa · Matamai Matavaarkan Untu
தமிழ் உரை
பொருள் உடைய காலத்திலும் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; அது அறிவுடையாரிடம் இல்லாதது; பேதையரிடம் உள்ளதாம்.
-
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.Inaiththunaith Thenpadhon Rillai Virundhin · Thunaiththunai Velvip Payan
தமிழ் உரை
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று சொல்லக்கூடிய அளவினது அன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவாகும்.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu · Nokkak Kuzhaiyum Virundhu
தமிழ் உரை
அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.
-
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi · Velaanmai Seydhar Poruttu
தமிழ் உரை
இல்லாளோடு காட்டிற்குச் செல்லாது இல்லத்திலிருந்து வாழும் வாழ்வானது, விருந்தினரைப் பேணி அவருக்கு நன்மை செய்தற்கேயாம்.
-
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.Viththum Italventum Kollo Virundhompi · Michchil Misaivaan Pulam
தமிழ் உரை
விருந்தினருக்கு உணவளித்துப் பின் எஞ்சியதைத்தான் உண்பானது நிலத்திற்கு வித்திடுதல் வேண்டுமோ? வேண்டா. விருந்தோம்புவானது நிலம் தானே விளையும்.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkku
தமிழ் உரை
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa · Marundheninum Ventarpaar Randru
தமிழ் உரை
உண்ணப்படும் பொருள் இறவாமைக்குக் காரணமாகிய மருந்தென்றாலும், விருந்தினர் இல்லத்தின் புறத்தே காத்திருக்கத் தானே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.
-
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.Parindhompip Patratrem Enpar Virundhompi · Velvi Thalaippataa Thaar
தமிழ் உரை
விருந்தினரைப் பேணி வேள்விப் பயனை அடையும் முயற்சியை மேற்கொள்ளாதவர், ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் அதனையிழந்து நாங்கள் இப்போது பற்றற்றவர் ஆயினோம் என்று பின்பு இரங்குவர்.
-
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai · Paruvandhu Paazhpatudhal Indru
தமிழ் உரை
தன்னிடம் வந்த விருந்தை நாள்தோறும் பேணுபவனின் இல்வாழ்க்கை வறுமையால் வருந்திக் கெடுதல் இல்லை.
-
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu · Nalvirundhu Ompuvaan Il
தமிழ் உரை
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுவானின் இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து வாழ்வாள்.
-
காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku · Yaadhusey Venkol Virundhu
தமிழ் உரை
நான் வருந்துவது அறிந்து அது தீர்தற்குக் காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டுவந்த கனவினுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Porai
தமிழ் உரை
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu · Maalai Ayarkam Virundhu
தமிழ் உரை
அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.
-
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu · Aimpulaththaaru Ompal Thalai
தமிழ் உரை
தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.
-
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.Urannasaii Ullam Thunaiyaakach Chendraar · Varalnasaii Innum Ulen
தமிழ் உரை
இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
-
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal · Nenjaththar Aavar Viraindhu
தமிழ் உரை
காதலர் நான் உறங்கும்பொழுது வந்து என் தோளைத் தழுவியிருந்து பின் விழிக்கும்பொழுது விரைந்து என் நெஞ்சத்தை அடைவார். ஒருகாலும் அவர் என்னைவிட்டு நீங்கார்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunai
தமிழ் உரை
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.Vaalatrup Purkendra Kannum Avarsendra · Naalotrith Theyndha Viral
தமிழ் உரை
காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.
-
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku · Uyalunmai Saatruven Man
தமிழ் உரை
உறங்காது வருந்துகின்ற என் கயல்போலும் மையுண்ட கண்கள் நான் வேண்டிக்கொண்டால் உறங்குமானால், கனவில் காதலரைக் காண்பேன்; கண்டால் அவரிடம் நான் எவ்வாறு காமநோய்க்குத் தப்பி, ஆற்றியுள்ளேன் என்பதை விரிவாகச் சொல்வேன்?
-
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun · Erupol Peetu Natai
தமிழ் உரை
புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா …”
விடை
D · மடமை மடவார்கண் உண்டு. · குறள் 89
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் …”
விடை
A · துணைத்துணை வேள்விப் பயன். · குறள் 87
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி …”
விடை
D · மிச்சில் மிசைவான் புலம். · குறள் 85
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





