Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Back
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

Ask the Thirukkural study companion →

← PreviousNext →
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous

107. இரவச்சம் · The Dread of Mendicancy

The Tamil is read by a computer voice.
1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.
தன்னிடம் உள்ளதை மறைக்காது உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தாரிடமும் இரவாதிருத்தல் இரந்து பெறுதலின் கோடி மடங்கு சிறந்ததாம்.
1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
இவ்வுலகைப் படைத்தவன் இதில் வாழ்வாரெல்லாம் இரந்துதான் உயிரோடு வாழ்தல் வேண்டும் என்று விதித்திருப்பானானால், அவன் அவரைப்போன்று எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.
1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமைத்துன்பத்தை முயன்று நீக்கலாம் என்றெண்ணாது, இரந்து நீக்குவோம் என்று கருதும் வன்மைபோல வலிமை யுடையது வேறெதுவும் இல்லை.
1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
உண்ண வேண்டுவன இல்லாமல் வறுமைவாய்ப்பட்டபோதும் பிறரிடம் சென்று இரத்தலை ஏற்றுக் கொள்ளாத சான்றாண்மை எல்லா உலகும் ஒன்றுசேர்ந்தாலும் கொள்ளாத பெருமை உடையதாகும்.
1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்கினிய தில்.
தன் முயற்சி கொண்டுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் செறிவற்ற உணவாயினும் அதனை உண்ணுதற்குமேல் இனியது ஏதுமில்லை.
1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில்.
பசுவிற்குத் தண்ணீர் தரவேண்டுமென்று இரந்து சொல்லும் போதும் அவ்விரத்தல் போன்று ஒருவனது நாவிற்கு இழிவு செய்வது வேறொன்றும் இல்லை.
1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று.
‘நீங்கள் இரக்கவேண்டுமானால் தம்மிடம் உள்ளதை மறைப்பாரிடம் இரத்தலை நீக்குங்கள்’ என்று சொல்லி இரப்பாரையெல்லாம் யான் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
வறுமையென்னும் கடலைக் கடத்தற்கு ஒருவன் ஏறிய இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற தோணி, அக்கடலில் ஓடும்போது கரத்தல் என்னும் வன்னிலத்தோடு மோதுமானால் பிளந்து போகும்.
1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
பொருள் உடையார்முன் வறியவர் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளம் கரைந்து உருகும். அந்நிலையைக்கண்டும் பொருள் உடையார் இல்லையென்று கரத்தலின் கொடுமையை நினைத்தால் அவ்வுருகும் அளவும் இல்லாது அழிந்துபோகும்.
1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.
கரப்பார், "இல்லை"யென்று சொல்லிய அளவில் இரப்பார்க்கு உயிர் போய்விடும்; இல்லையென்று சொல்லும் கரப்பார்க்கு உயிர் மேலும் நிற்றலால் அது எங்குப்போய் ஒளிந்து கொள்ளும்?

Chapters

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education, Government of India
Implemented by Central Institute of Classical Tamil (CICT), Chennai