शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः · केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै
काशी तमिल सङ्गमम् 5.0
काशी तमिल सङ्गमम् 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै · शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः
अस्य जालस्थानस्य अयम् अनुवादः प्रारूपमात्रम् अस्ति; CICT संस्थानं तस्य समीक्षां करोति। English
प्रतिगच्छतु
अनुवादाः

22 भाषासु तिरुक्कुरळ्

सर्वाणि 1,330 कुरळ्-पद्यानि, अष्टम-अनुसूच्याः भाषासु CICT संस्थानस्य अनुवादैः सह। अध्यायं भाषां च चिनोतु।

तिरुक्कुरळ्-अध्ययन-सहचरं पृच्छतु →

← पूर्वतनम्अग्रिमम् →
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love

112. நலம் புனைந்து உரைத்தல் · The Praise of her Beauty

तमिल-पाठः सङ्गणक-स्वरेण पठ्यते।
1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
அனிச்சப்பூவே, வாழ்வாயாக. நீ எல்லாப்பூக்களினும் மெல்லியதன்மை கொண்டிருந்தாலும் என்னால் விரும்பப்படுபவள் உன்னைவிடவும் மென்மையானவள்.
1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.
நெஞ்சே, இவள் கண்களைப் பலரால் காணப்பெறும் பூக்களை ஒத்ததாக எண்ணி, தாமரை, குவளை, நீலம் போன்ற மலர்களைப் பார்த்தால் மயக்கம் அடையாதே.
1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மூங்கிலைப்போன்ற தோளை உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாகும்; பல் முத்தைப் போன்றதாகும்; இயல்பாய மணம் நறுமணமாயிருக்கும்; மையுண்ட கண்கள் வேலை நிகர்த்தவையாகும்.
1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.
குவளைப்பூக்கள் காண இயலுமானால் சிறந்த அணிகளை உடையாளின் கண்களுக்கு நாம் ஒப்பாகமாட்டோம் என்று நாணத்தால் கவிழ்ந்து நிலத்தினைப் பார்க்கும்.
1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை.
இவள் தன் மென்மையை எண்ணிப்பார்க்காது அனிச்சப்பூவைக் காம்பு களையாது சூடியிருக்கிறாள். இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா.
1116
மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.
விண்மீன்கள் திங்களையும் இப்பெண்ணின் முகத்தையும் இது திங்கள், இது முகம் என்று வேறுபாடு அறிய இயலாமையால் தம் நிலையினின்றும் கலங்கித் திரிகின்றன.
1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.
முன் தேய்ந்து பின் வளரும் திங்களிடம் காணப்பெறும் மறுவைப்போன்று இப்பெண்ணின் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லை.
1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.
திங்களே, வாழ்வாயாக. இப்பெண்ணின் முகம்போல் நீயும் ஒளிவீச இயலுமானால், என் காதலைப்பெறுவாய்.
1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி.
திங்களே, மலர்போன்ற கண்களை உடைய இவளது முகத்தை நீ ஒத்திருக்க வேண்டுமானால் நான் மட்டும் காணுமாறு தோன்று; பலர்காணத் தோன்றாதே.
1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.
மென்மையான அனிச்சப்பூவும் அன்னப்பறவையின் சிறகுமாகிய இரண்டு பொருள்களும் இப்பெண்ணின் அடிகளுக்கு நெருஞ்சிப்பழம்போல் துன்பம் செய்யும்.

अध्यायाः

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0 · तिरुक्कुरळ्-बहुभाषा-ऐप् रूपेण अपि उपलभ्यते

उपक्रमः Government of India शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः
कार्यान्वयनम् केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै