सोलोंथाइ मिनिस्थ्रि, भारत सोरखार · सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल (CICT), चेन्नाइ
काशी तामिल संगमम 5.0
काशी तामिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल (CICT), चेन्नाइ · सोलोंथाइ मिनिस्थ्रि, भारत सोरखार
इन्टारफेसनि बे राव सोलायनाया मोनसे ड्राफ्ट; CICT आ बेखौ नायबिजिरगासिनो दं। English
थांफिन
राव सोलायनाय

मोन 22 रावाव तिरुक्कुरल

गासैबो मोन 1,330 कुरल, संबिजिरनि दाइनथि फारिलाइनि रावफोराव CICT नि राव सोलायनायजों लोगोसे। मोनसे आयदा आरो मोनसे राव सायख।

तिरुक्कुरल फरायनाय लोगोखौ सों →

← सिगांनिउननि →
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love

113. காதற் சிறப்புரைத்தல் · Declaration of Love's special Excellence

तामिलखौ कम्पिउटारा फरायो।
1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர்.
பணிவான மொழியினை உடைய இப்பெண்ணின் தூய எயிற்றில் ஊறிய நீர் பாலொடு தேனைக்கலந்த கலவைபோன்ற சுவை உடையது.
1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னமடந்தையொடு எம்மிடை நட்பு.
உடம்பொடு உயிருக்கு உள்ள நட்பு எத்தன்மையதோ அத்தன்மையது இப்பெண்ணொடு எனக்கு உள்ள நட்பு.
1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.
என் கண்ணின் கருமணியில் உறைகின்ற பாவையே, நீ அங்கிருந்தும் போய்விடுவாயாக. நீ போகவில்லையானால் என்னால் விரும்பப்படும் அழகிய நெற்றியை உடையவளுக்கு இருக்க இடமில்லையாம்.
1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.
தேர்ந்தெடுத்த இழையினை அணிந்தவள் என்னோடு கூடும்போது உயிர்க்கு உடம்போடு கூடுதல்போலும்; பிரியும்போது, உயிர்க்கு உடலிலிருந்து நீங்குதல்போலாம்.
1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
ஒளி வீசுபவையாய்ப் போரைச்செய்யும் கண்களை உடையாளின் குணங்களை நான் மறப்பேனாயின் நினைப்பேன்; ஒருபொழுதும் மறத்தலை அறியேன்; ஆதலால், நினைத்தலையும் அறியேன்.
1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்நுண்ணியர்எம் காத லவர்.
என் காதலர் என் கண்களிலிருந்து போகமாட்டார்; நான் என்னை அறியாது இமைப்பேனாயின் வருந்தவும்செய்யார்; ஆதலால், அவர் காணப்படாத நுண்ணியர் ஆவார்.
1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
என் காதலர் எப்போதும் என் கண்ணில் உள்ளாராதலால் கண்ணினை அஞ்சனத்தால் எழுதுதலைச் செய்யேன். அஞ்சனத்தால் எழுதும்காலத்தில் அவர் மறைந்துவிடுவார் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.
1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.
என் காதலர் என் நெஞ்சில் உள்ளாராதலால் உண்ணும்போது சூடாக உண்ணுதலுக்கு அஞ்சுகின்றேன்; சூடான உணவை உண்டால் அவர் வெய்துறலை அறிந்த அச்சமே அதற்குக் காரணமாகும்.
1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னும்இவ் வூர்.
என் கண் இமைக்குமானால் உள்ளிருக்கின்ற காதலர் மறைந்துவிடுவார் என்பதை அறிந்து கண் இமைத்தலைச் செய்யமாட்டேன்; அதற்கே இவ்வூரானது ‘அவர் அன்பில்லாதார்; துயிலாத் துன்பத்தைத் தந்தவர்' என்று சொல்லும்.
1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும்இவ் வூர்.
என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்வோடு உறைவார்; அதனை அறியாது அவரைப் ‘பிரிந்து உறைவார், அன்பில்லாதவர்’ என்று இவ்வூர் சொல்லும்.

आयदाफोर

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

राव सोलायनाय © सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल, चेन्नाइ · CC BY 4.0 · तिरुक्कुरल गोबां-राव एप महरैबो मोनो

नाजानाय Government of India सोलोंथाइ मिनिस्थ्रि, भारत सोरखार
मावफुंनाय सेन्ट्रेल इन्स्टिटिउट अफ क्लासिकेल तामिल (CICT), चेन्नाइ