கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
மொழிபெயர்ப்புகள்

22 மொழிகளில் திருக்குறள்

எட்டாம் அட்டவணை மொழிகளில் CICT-இன் மொழிபெயர்ப்புகளுடன் 1,330 குறள்கள். அதிகாரத்தையும் மொழியையும் தேர்ந்தெடுக்க.

திருக்குறள் கற்றல் துணைவனிடம் கேட்க →

← முந்தையஅடுத்து →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

117. படர்மெலிந் திரங்கல் · Complainings

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
இக்காமநோயைப் பிறர் அறிதலுக்கு நாணி நான் அதை மறைக்க முயன்றேன்; ஆனால், நீர்வேண்டுமென்று இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவதுபோல் அந்நோய் மேலும் மேலும் கொடிதாயிற்று.
1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குஉரைத்தலும் நாணுத் தரும்.
இக்காமநோயை இங்குள்ளார் யாரும் அறியாமல் மறைத்தலையும் என்னால் செய்யஇயலவில்லை; நோய்க்குக் காரணமான காதலர்க்கு இதனைத் தெரிவித்தலும் எனக்கு நாணத்தைத் தரும். இனி நான் என்செய்வேன்?
1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்நோனா உடம்பின் அகத்து.
காமநோயும், அதனை வெளியில் சொல்ல இயலாத நாணமும், அவற்றைச் சுமக்க இயலாத என் உடம்பில், உயிர் காவடியின் தண்டாக, அதன் இருபக்கங்களிலும் தொங்கும்.
1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
யாவர்க்கும் உளவாய காமக்கடலும் அதை நீந்தும் அரணாகிய தோணியும் ஆகிய இரண்டில் எனக்கு உள்ளது காமக்கடலே; அதனை நீந்தும் தோணி இல்லை.
1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.
இன்பம் தருதற்குரிய நட்பில் துன்பம் செய்யவல்லவர், துன்பம் தருதற்குரிய பகைமையில் என்ன செய்வாரோ? (துயர் வருதலை நீக்கவேண்டிய காதலரே அதனைச் செய்யாது இருக்கின்றாரே என்று வருந்துவாள்.)
1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
காதலருடன் கூடுதலால் காமம் தரும் இன்பம் கடல்போலப் பெரிதாம். காதலரிடமிருந்து பிரியும்போது காமம் செய்யும் துன்பம் அக்கடலினும் பெரிதாகும்.
1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.
காமமாகிய கடலை நீந்தியும் அதற்குக் கரைகாண என்னால் இயலவில்லை; கரைகாணாத அக்காலம் எல்லாரும் உறங்கும் அறை இருளாயது. அவ்விருளிலும் அதற்கு ஒரு துணையில்லாமல் நான் மட்டுமே உள்ளேன்.
1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை.
இந்த இரவானது அறிவற்றது, இரங்கத்தக்கது. உலகத்துள்ள உயிர்களையெல்லாம் தானே உறங்கச்செய்தலால் அதற்கு என்னைத்தவிர வேறு துணையில்லை.
1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.
காதலரோடு நான் இன்புற்ற நாட்களிலெல்லாம் குறியவாய், அவரிடமிருந்து பிரிந்து வாடும் இந்நாட்களில் நெடியவாய்ச் செல்லுகின்ற இராக்காலங்கள் அக்கொடியாரது கொடுமைக்குமேலே கொடுமைசெய்கின்றன.
1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோஎன் கண்.
மனம்போலக் காதலர் உள்ள ஊருக்கு விரைந்து செல்லவல்லவையாயின் என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய தம் நீரை நீந்தமாட்டா; நீந்துதலைத்தவிர அவற்றிற்கு வேறு வழியில்லை.

அதிகாரங்கள்

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0 · திருக்குறள் பன்மொழிச் செயலியாகவும் கிடைக்கிறது

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி