হন্দোকপশিং
লোল 22 দা তিরুক্কুরল
কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love
118. கண் விதுப்பழிதல் · Eyes consumed with Grief
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
தாம்காட்ட யாம்கண் டது.
தணியாத இக்காமநோயை நான் அறிந்தது கண்கள் காதலரைக் காட்டியதால் அன்றோ; அன்று அதைச்செய்த கண்கள் இன்று என்னைக் காட்டச்சொல்லி அழுவது எதைக்கருதி?
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?
பைதல் உழப்பது எவன்?
பின்விளைவுகளை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கிய மையுண்ட கண்கள், இது நம்மால் வந்ததால் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்பதை உணராது துன்பம் அடைவது எதைக்கருதி?
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
இதுநகத் தக்க துடைத்து.
அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கிய இக்கண்கள், இன்று தாம் அழுவது நம்மால் சிரிக்கத்தக்கதாகும்.
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
மையுண்ட கண்கள், அன்று நான் உய்ய இயலாது ஒழிவில்லாத காமநோயை என்னிடம் நிலைபெறச்செய்து, தாம் மேலும் அது இயலாதவாறு நீர் வற்றிவிட்டன.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
காமநோய் செய்தஎன் கண்.
கடலும் சிறிதாகும்வண்ணம் எனக்குக் காமநோயைப் பெரிதாக உண்டாக்கிய என் கண்கள் அத்தீச்செயலால் தாமும் துயில முடியாது துன்பத்தையும் அடைந்துள்ளன.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
தாஅம் இதற்பட் டது.
எனக்கு இக்காமநோயை உண்டாக்கிய கண்கள் தாமும் உறங்காது அழுதுகொண்டிருத்தல் மிகவும் இனியதாகும்.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
வேண்டி அவர்க்கண்ட கண்.
மிகவும் விரும்பி, உள்ளம் நெகிழ்ந்து, இடைவிடாது அன்று அவரைக் கண்ட கண்கள், இன்று துயில இயலாத துன்பத்தை அனுபவித்துத் தம்முள்ளிருக்கும் நீர் அற்றுப்போவதாக.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
காணாது அமைவில கண்.
நெஞ்சால் விரும்பாது சொல் அளவில் விரும்பியவர் இவ்விடத்தில் உள்ளார். அதனால் யாது பயன்? அவரைக் கண்கள் காணாது அமைதி பெற இயலவில்லை. நான் ஆற்றியிருந்தாலும் கண்கள் அவரைக் காணுதற்குப் பெரிதும் விரும்புகின்றன.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
ஆரஞர் உற்றன கண்.
காதலர் வராதபோது அவர் வரவை எதிர்பார்த்து உறங்கா; அவர் வந்தால் அவரது பிரிவிற்கு அஞ்சி உறங்கா; எனவே, அவர் வந்தாலும் வராவிட்டாலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை அடைகின்றன.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
அறைபறை கண்ணார் அகத்து.
என்னைப்போலும் அறைபறையாகிய கண்களை உடையவர் தம் நெஞ்சில் அடக்கிய மறையை அறிதல் இவ்வூரில் உள்ளவர்களுக்கு எளிதாகும்.
তাংককশিং
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই



