Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

← PreviousNext →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

119. பசப்புறு பருவரல் · The Pallid Hue

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
என்னை நயந்தவர்க்கு அப்போது பிரிவையேற்றுக்கொண்ட நான் அதனைத் தாங்க இயலாது இப்போது பசப்புற்ற என் தன்மையை யாருக்குச் சொல்வேன்?
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
இப்பசப்பு தன்னை அவர் உண்டாக்கினார் என்னும் பெருமித உணர்வால் என் உடல்மேல் ஊர்கின்றது.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
பிரிந்துசென்றபோது என் உடல் அழகையும் நாணத்தையும் அவர் எடுத்துக்கொண்டு, அவ்விரண்டிற்கும் கைம்மாறாக இக்காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்.
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
அவர் சொற்களை நான் மனத்தால் நினைக்கின்றேன்; அவர் ஆற்றல்களையே நான் வாக்கால் உரைக்கின்றேன். அவ்வாறு செய்யினும் பசப்பு என் உடலில் வந்துள்ளது. இது வஞ்சச்செயலாகும்.
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
முன்பும் என் காதலர் வேற்றிடம் செல்லும்போது என் உடல் பசப்புறுவது இங்கே அல்லவா? அத்தன்மையுடைய பசப்பு இன்று வேறுபடுமா? அதோ பார், என் காதலர் பிரிந்துசெல்கின்றார்; இதோ பார், என் உடலில் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளது.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கிவரும் இருள்போன்று காதலரது தழுவலின் மெலிவுபார்த்து இப்பசப்பு நெருங்கிவரும். முன் காதலர் பிரியாதிருக்கும்போதும் தக்க தருணம் பார்த்துவரும் பசப்பு இப்போது பிரிந்திருத்தலால் எதனைச் செய்யாதிருக்கும்?
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
முன்னொருகால் காதலரை அணைத்துக்கிடந்த நான் அறியாது சற்று விலகினேன்; அவ்வளவில் பசப்பானது அள்ளிக் கொள்வதுபோல் என் உடலில் படர்ந்தது.
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
இவள் ஆற்றியிராமல் பசலை நோயுற்றாளென்று என்னைப் பழிகூறுவார்களேதவிர, இவளை அவர் நீங்கிப்போயினாரென்று அவரைப் பழிகூறுவார் யாரும் இல்லை.
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
இப்பிரிவை நான் ஏற்றுக்கொள்ளும்வகையில் சொல்லி இன்று அவர் நல்ல நிலையினர் ஆவாராயின் என் உடல் பட்டதுபடப் பசப்பதாகட்டும். அதனால், எனக்குக் கவலை இல்லை.
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
அன்று குறைநயப்பித்துக் கூடிய காதலர் இன்று நல்காமையை யாரும் தூற்றவில்லையானால், பசப்புத்தான் ஆயினாளென அவர்கள் சொல்ல அப்பெயரைப்பெறுதல் எனக்கு நல்லது. காதலரை அருள் அற்றவர் என்று சொல்லாது, பசந்தாள் இவள் என்று சொல்லுதலே நன்றாம்.

Chapters

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education
Implemented by Central Institute of Classical Tamil
In association with Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti