ترجمہٕ
22 زَبانَن منٛز تِرُکُّرَل
سٲری 1,330 شعر، أٹھِمہِ شیڈیوٗلٕچَن زَبانَن منٛز CICT سٕنٛدؠو ترجمَو سان۔ باب تہٕ زَبان ژٲرِو۔
تِرُکُّرَل مُطالعٲتی ساتھِس پۄچھِو ←
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love
120. தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.
தம்மால் காதலிக்கப்படும் கணவரால் காதலிக்கப்படும் மகளிர் காம இன்பம் என்னும் பரல் இல்லாத கனியைப் பெற்றவராவர்.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
தாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர்க்குக் காதலர் பிரிந்தாராயினும் தம்மை நினைந்து வருவார்; வந்தால் தாம் இன்புற்று வாழ்வோம் என்னும் செருக்கு ஏற்புடையதாகும்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.
கற்புடைய பெண்களால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் விரும்பும் கணவரால் விரும்பப் படவில்லையாயின் தீவினை செய்தவராவர்.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
நம்மால் காதலிக்கப்பட்டவர் நம்மைக் காதலிக்கவில்லையானால் நமக்கு என்ன இன்பத்தைத் தருவார்?
ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது.
மகளிர், ஆடவர் என்னும் இருவரில் வேட்கை ஒருவரிடமே உண்டானால் அது இன்னாததாகும். காவடியின் பாரம்போல இருவரிடமும் ஒப்பாயிருப்பின் அது இனிதாகும்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
தம்மால் விரும்பப்படும் காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்லும் பெறாது பிரிவாற்றி வாழ்கின்ற மகளிர்போல வன்கண்மை உடையார் இவ்வுலகில் இல்லை.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.
என்னால் விரும்பப்பட்ட காதலர் என்னிடம் அன்பற்றவ ராயினும் அவர் சொல்லும் யாதொரு சொல்லும் என் செவிக்கு இனியதாம்.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.
நெஞ்சே, உன்னோடு இணையாதவர்க்கு உன் நோயை எடுத்துரைக்க முனைவாய்; ஆனால், அரிதாய அதனைவிட்டு, உனக்குத் துயரம் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக; அது எளிதாகும்.
اَبواب
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0 · تِرُکُّرَل کثیٖر لِسٲنی ایپ رٔنگؠ تہِ دستیاب





