মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হনবা
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →

← মমাঙগীমথংগী →
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue

34. நிலையாமை · Instability

তামিল অসি কম্প্যুটরগী খোনজেলনা পাবনি।
331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.
நிலையற்றவற்றை நிலையுடையவை என்று எண்ணுகின்ற புல்லிய அறிவினை உடையவராதல் ஒருவர்க்கு இழுக்காகும்.
332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.
ஒருவனிடம் பெரிய செல்வம் சேருதல் கூத்தாடும் அரங்கில் பெரிய கூட்டம் கூடுதல் போன்றது. அச்செல்வம் நீங்குவதும் கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் அரங்கிலிருந்து நீங்குவது போன்றதாகும்.
333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
செல்வம் நிலையில்லாத இயல்பினை உடையது; அதனை அடைந்தால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.
334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின்.
நாள் என்பது தன்னை ஒரு காலவரையறைபோலக் காட்டிக் கொள்ளும். ஆனால், உண்மையை உணர்வார்க்கு அது உயிரை அறுத்துச் செல்லும் வாளாகும்.
335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்
பேசமுடியாமல் நாக்கை அடக்கி விக்குள் வருவதற்கு முன்னால், ஒருவன் நற்செயல்களை விரைந்து செய்தல்வேண்டும்.
336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.
ஒருவன் நேற்று உயிருடன் இருந்தான்; இன்று உயிரற்றவன் ஆனான் என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்.
337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல.
ஒரு சிறுகால அளவும் தம் உயிரும் உடலும் இணைந்திருப்பது அரிதென்று அறிய மாட்டாதவர் கோடிக்கும் மேலான பல நினைவுகளை நினைந்திருப்பார்கள்.
338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு.
உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டை தனித்துக் கிடக்க அதன் உள்ளிருந்த பறவை பருவம் வரும்போது பறந்து சென்றுவிடும் தன்மையதாகும்.
339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
இறப்பு உறக்கத்தை ஒத்தது; பிறப்பு உறங்கிப் பின் விழிப்பதை ஒத்தது.
340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு.
உடம்பில் சிறிதுகாலம் ஒதுங்கியிருந்து அதிலிருந்து நீங்குகின்ற உயிருக்கு எப்போதும் தங்கியிருக்கக்கூடிய நிலையான இல்லம் இதுவரையிலும் அமையவில்லைபோலும்.

তাংককশিং

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
পাঙথোক্লিবা সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
খূৎ শম্নরিবা ইন্দিয়ান ইনষ্টিট্যুট ওফ টেক্নোলোজী মদ্রাসkashitamil.iitm.ac.in  বনারস হিন্দু য়ুনিভর্সিটি, বারানসীkashitamil.bhu.edu.in  ভারতীয় ভাষা সমিতি