মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
அறத்துப்பால் · Virtue › பாயிரவியல் · Prologue

4. அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அறமானது சிறப்பைத்தரும்; செல்வத்தைத்தரும். ஆதலால், உயிர்களுக்கு அறத்தைக் காட்டிலும் மிக்க உயர்வைத் தருவது யாது? அறத்தினும் மேலான உறுதி ஏதுமில்லை.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஒருவனுக்கு அறம் செய்தலால் வரும் ஆக்கத்தைக்காட்டிலும் மேலான ஆக்கமும் இல்லை; அதனைச் செய்யாததால் வரும் கேட்டினும் மேலான கேடும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஒருவன், அறமாகிய நல்வினையைத் தனக்கு இயலும் வகைகளிலெல்லாம் இடைவிடாது, அது செல்லும் இடங்களிலெல்லாம் செய்தல் வேண்டும். இல்லறத்தார் தம் பொருள்நிலைக் கேற்பவும், துறவறத்தார் தம் உடல்நிலைக்கேற்பவும் அறம் செய்தல் இயலும். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் அறம் செல்லும் இடங்களாம். அவற்றால் செய்யும் அறங்கள் நல்லெண்ணமும், நற்சொல்லும், நற்செயலும் ஆகும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
அறமாவது ஒருவன் தன் மனத்தளவில் குற்றமற்றவனாக இருத்தலே. அதைத்தவிர்த்த சொல்லும் வேடமும் அறமெனக் கருதப்படமாட்டா; அவை வெற்று ஆரவாரத்தன்மை கொண்டவை.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி, இடைவிடாது நிகழ்வது அறமாகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
நாம் இப்போது இளையவராக இருத்தலால் முதுமைவந்து இறக்கும் தறுவாயில் அறத்தினைச் செய்துகொள்ளலாம் என்று எண்ணாது, நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்யும் அறம் உடலிலிருந்து உயிர் போகுங்காலத்தில் அழிவில்லாத துணையாகும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறத்தின் பயன் இதுவென்று யாரும் யாருக்கும் உணர்த்த வேண்டியதில்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும், அதில் அமர்ந்திருப்பவனுமாகிய காட்சியே அறத்தின் பயனைப் புலப்படுத்தும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
செய்யாது வீணில் அழியும் நாள் ஏதுமில்லாமல் ஒருவன் என்றும் அறம் செய்வானானால், அந்த அறச்செயலானது, அவன் உடலோடு கூடும் நாள்வரும் வழியை வராமல் அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாது வருவனவெல்லாம் பின்னால் துன்பமே விளைவிப்பவை. அதுவுமன்றி, அவை புகழ் தருவனவும் அல்ல.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
ஒருவன் செய்யத்தக்கது அறமாகும்; வெறுத்து ஒதுக்கத்தக்கது தீவினை ஆகும்.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti