ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ · ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ · ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಇಂಟರ್‌ಫೇಸ್‌ನ ಈ ಅನುವಾದವು ಕರಡು ರೂಪದಲ್ಲಿದ್ದು, CICT ಇದನ್ನು ಪರಿಶೀಲಿಸುತ್ತಿದೆ. English
ಹಿಂದಕ್ಕೆ
ಅನುವಾದಗಳು

22 ಭಾಷೆಗಳಲ್ಲಿ ತಿರುಕ್ಕುರಳ್

ಸಂವಿಧಾನದ ಎಂಟನೇ ಅನುಸೂಚಿಯ ಭಾಷೆಗಳಲ್ಲಿ CICT ಅನುವಾದಗಳೊಂದಿಗೆ ಎಲ್ಲ 1,330 ಕುರಳ್‌ಗಳು. ಅಧ್ಯಾಯ ಮತ್ತು ಭಾಷೆಯನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ.

ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯನ್ನು ಕೇಳಿ →

← ಹಿಂದಿನದುಮುಂದಿನದು →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

41. கல்லாமை · Ignorance

ತಮಿಳು ಪಠ್ಯವನ್ನು ಕಂಪ್ಯೂಟರ್ ಧ್ವನಿ ಓದುತ್ತದೆ.
401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
அறியவேண்டிய நூல்களையெல்லாம் அறியாது ஒருவன் அவையில் ஒன்றனைச் சொல்லுதல் அரங்கில்லாமல் உண்டை உருட்டலைச் செய்வதுபோலும்.
402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
கல்வியறிவற்றவன் ஓர் அவையில் ஒன்று பேச விரும்புதல் முலைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை அடைய விரும்பினால்போன்றது.
403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
கற்றார் அவையில் ஒன்றையும் பேசாதிருப்பரேல் கல்வியறிவு அற்றாரும் மிக நல்லவராவர்.
404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.
கல்லாதவனது அறிவுடைமை எப்போதாவது மிக நன்றாயிருப்பினும் அறிவுடையார் அதனை மதிக்கமாட்டார்.
405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவன் என்று மதிக்கும் மதிப்பானது கற்றவனோடு உரையாடும்போது அழியும்.
406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
கல்வியறிவற்றார் பிறரால் பார்க்கப்படுவதால் உயிரோடு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவர். அவ்வளவினராதல் அல்லாமல் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர்நிலம் போன்றவராவர்.
407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.
நுண்ணிதாய் மிகவும் சிறப்புற்றுப் பல நூல்களையும் கற்ற ஆழமான அறிவற்றவனின் அழகு, சுதையால் சிறப்புடன் புனையப்பெற்ற பாவையின் அழகை ஒத்தது.
408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
நல்லாரிடம் நிற்கும் வறுமையினும் கல்லாரிடம் நிற்கும் செல்வம் கொடியது.
409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும், தாழ்ந்தகுடியில் பிறந்து கற்றவரது பெருமையளவு பெருமை உடையவர் ஆக மாட்டார்.
410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.
மேலான நூல்களைக் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள ஏற்றத்தாழ்வு மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வை ஒத்ததாகும்.

ಅಧ್ಯಾಯಗಳು

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0 · ತಿರುಕ್ಕುರಳ್ ಬಹುಭಾಷಾ ಆ್ಯಪ್ ರೂಪದಲ್ಲೂ ಲಭ್ಯ

ಉಪಕ್ರಮ Government of India ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಅನುಷ್ಠಾನ ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ