Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Back
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

Ask the Thirukkural study companion →

← PreviousNext →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

43. அறிவுடைமை · The Possession of Knowledge

The Tamil is read by a computer voice.
421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.
ஒருவனுக்கு அறிவென்பது இறுதி நேராமல் காக்கும் கருவியாகும்; அது பகைவரால் அழிக்கவியலாத உள் அரணுமாகும்.
422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.
மனத்தை அது சென்ற இடங்களிலெல்லாம் செல்லவிடாது, நன்மை தீமைகளை ஆராய்ந்தறிந்து, தீயனவற்றினின்றும் நீக்கி, நல்லனவற்றில் செலுத்துவது அறிவாகும்.
423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருளை யார் சொல்லக்கேட்டாலும் அப்பொருளின் உண்மையான பயனைக் காணவல்லது அறிவாகும்.
424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.
தான் சொல்லும் சொற்கள் அரிய பொருளுடையவையாயினும் கேட்போர் எளிதில் விளங்கிக்கொள்ளுமாறு, அவர் மனம்கொளச் சொல்லிப் பிறர் வாயால் கேட்டும் சொற்களின் பொருள் புரிந்துகொள்ள அரிதாயினும் அதனைக் கண்டுகொள்ள வல்லதே அறிவாகும்.
425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு.
உயர்ந்தோரை நண்பர்களாக்கிக்கொள்வது ஒருவனுக்கு நன்மை பயக்கும்; இன்பம்தரும். அத்தகைய நட்பில் மலர்தலும் கூம்புதலும் இல்லாமல் ஒரே நிலையில் இருத்தல் அறிவுடையவன் செயலாகும்.
426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.
உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒட்டி ஒழுகுவதே அறிவுடைமையாகும்.
427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.
பின் வரப்போவதை முன்னே அறிய வல்லவர் அறிவுடையார்; அதனை முன்னறியமாட்டாது வந்தபின் அறிவார் அறிவற்றவர்.
428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்சப்பட வேண்டியதை அஞ்சாமை அறிவீனமாகும்; அஞ்சப்பட வேண்டியதை அஞ்சுதல் அறிவுடையார் தொழிலாகும்.
429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.
வரப்போவதை முன்னறிந்து, தம்மைக் காத்துக்கொள்ளும் அறிவினை உடையவர்க்கு அவர் நடுங்க வரக்கூடிய துன்பம் ஏதுமில்லை.
430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.
அறிவுடையார் வேறொன்றும் இல்லாதாராயினும் எல்லாம் உடையவர்; அறிவிலார் பிறவெல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.

Chapters

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education, Government of India
Implemented by Central Institute of Classical Tamil (CICT), Chennai