ਅਨੁਵਾਦ
22 ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ ਤਿਰੁੱਕੁਰਲ
ਸਾਰੇ 1,330 ਕੁਰਲ, ਅੱਠਵੀਂ ਅਨੁਸੂਚੀ ਦੀਆਂ ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ CICT ਦੇ ਅਨੁਵਾਦਾਂ ਸਮੇਤ। ਅਧਿਆਇ ਅਤੇ ਭਾਸ਼ਾ ਚੁਣੋ।
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty
47. தெரிந்து செயல்வகை · Acting after due Consideration
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஒரு செயலைச் செய்யமுனையும்போது, அதனால் அழிவதையும், அழிந்தால் பின்னர் ஆவதையும், பிற்பொழுதில் தரும் ஊதியத்தையும் சீர்தூக்கிப்பார்த்து, அழிவதினும் ஆவது மிகுமென்றும் எதிர்காலத்தில் ஆக்கம் வளருமென்றும் தெரிந்தால் அதனைச் செய்யவேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
அரும்பொருள் யாதொன்றும் இல்
தாம் அறிந்த இனத்தோடு செய்யத்தகும் செயலை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்துமுடிக்கும் ஆற்றல் உடையவர்க்குச் செய்ய இயலாத செயல் ஏதும் இல்லை.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
ஊக்கார் அறிவுடை யார்.
வரப்போகும் ஊதியத்தை எண்ணித் தாம் போட்ட முதலையும் அழிக்கக்கூடிய செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
ஏதப்பாடு அஞ்சு பவர்.
தமக்கு இழிவென்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுபவர் இனத்தோடும் தனித்தும் ஆராயாத செயலைத் தொடங்கமாட்டார்.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
பாத்திப் படுப்பதோ ராறு.
சென்றால் நிகழ்வனவற்றையெல்லாம் முற்றும் எண்ணாமல் அரசன் பகைவர்மேல் படையெடுத்துச் செல்லுதல், பகைவர் என்னும் பயிரை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வதற்கான ஒரு வழியாகும். அத்தகைய படையெடுப்பானது தோல்வியிலேயே முடியும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யாமை யானுங் கெடும்.
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
எண்ணுவம் என்பது இழுக்கு.
செய்யத்தக்க செயலை முடிக்கும் வழியை எண்ணிப்பார்த்துத் தொடங்கல் வேண்டும்; பின்னர் எண்ணிப்பார்த்துக்கொள்ளலாம் என்று தொடங்குவது குற்றமாகும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
போற்றினும் பொத்துப் படும்.
வெற்றியோடு முடியும் வழியால் செயலை மேற்கொள்ளாத முயற்சி, துணைசெய்வோர் பலரிருந்து உதவினாலும் தீமையே பயக்கும்.
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
பண்பறிந் தாற்றாக் கடை.
பிற வேந்தரின் குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்ப, தம் செயலை மேற்கொள்ளா விட்டால், நல்ல வழியைக் கையாண்டாலும் குற்றமே உண்டாகும்; அச்செயல் வெற்றிபெறாது.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
கொள்ளாத கொள்ளாது உலகு.
வினை முடித்தல் வேண்டி, அரசர் தம் நிலைமைக்குப் பொருந்தாத வழிகளை மேற் கொள்வாரானால் உலகம் அவரை இகழும்; ஆதலால் உலகம் இகழாத வழிகளை ஆராய்ந்தறிந்து செயல்படல் வேண்டும்.
ਅਧਿਆਇ
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
ਅਨੁਵਾਦ © ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ, ਚੇਨਈ · CC BY 4.0 · ਤਿਰੁੱਕੁਰਲ ਬਹੁ-ਭਾਸ਼ਾਈ ਐਪ ਵਜੋਂ ਵੀ ਉਪਲਬਧ



