ترجمہٕ
22 زَبانَن منٛز تِرُکُّرَل
سٲری 1,330 شعر، أٹھِمہِ شیڈیوٗلٕچَن زَبانَن منٛز CICT سٕنٛدؠو ترجمَو سان۔ باب تہٕ زَبان ژٲرِو۔
تِرُکُّرَل مُطالعٲتی ساتھِس پۄچھِو ←
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty
49. காலமறிதல் · Knowing the fitting Time
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
தன்னைவிட வலிமைமிக்க ஆந்தையைக் காக்கை, பகற்பொழுதிலேயே வெற்றிகொள்ளும்; பகைவரை வெல்லக் கருதும் வேந்தர்க்குக் காலம் இன்றியமையாதது.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.
காலத்தோடு பொருந்தச் செயல்படுதல், ஒருவரிடமும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் இறுகப் பிணைக்கும் கயிறாகும்.
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.
ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.
ஒருவன் உலகம் முழுவதையும் தானே ஆளவேண்டுமென்று எண்ணினான் எனில், அதற்கான செயலைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், உலகம் அவன் கையகத்ததாகும்.
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.
தவறாமல் உலகமெல்லாம் வெல்லக்கருதும் அரசர், வலிமை மிக்கவராயினும் அது கருதாமல், ஏற்ற காலம் வரும்வரையிலும் காத்திருப்பர்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.
வலிமைமிக்க மன்னன் பகைவர்மேல் படையெடுக்காது காத்திருத்தல், போரிடும் ஆடு ஆற்றலோடு பாய்வதற்காகப் பின்வாங்கும் தன்மையது.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை.
பகைவர்க்கு இறுதிக்காலம் வரும்வரையிலும் அவரைக் கண்டால் அரசர் பணிதல் வேண்டும்; அக்காலம் வரும்போது அவர்கள் தலைகீழாக வீழ்வர்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.
ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
اَبواب
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0 · تِرُکُّرَل کثیٖر لِسٲنی ایپ رٔنگؠ تہِ دستیاب





