വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ · സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ
കാശി തമിഴ് സംഗമം 5.0
കാശി തമിഴ് സംഗമം 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ · വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ
ഇന്റർഫേസിന്റെ ഈ പരിഭാഷ ഒരു കരട് രൂപമാണ്; CICT ഇത് പരിശോധിച്ചുവരികയാണ്. English
പിന്നോട്ട്
പരിഭാഷകൾ

22 ഭാഷകളിൽ തിരുക്കുറൾ

എട്ടാം പട്ടികയിലെ ഭാഷകളിലേക്കുള്ള CICT-യുടെ പരിഭാഷകളോടൊപ്പം 1,330 കുറളുകളും. ഒരു അധ്യായവും ഒരു ഭാഷയും തിരഞ്ഞെടുക്കുക.

തിരുക്കുറൾ പഠനസഹായിയോട് ചോദിക്കുക →

← മുമ്പത്തേത്അടുത്തത് →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

5. இல்வாழ்க்கை · Domestic Life

തമിഴ് കുറൾ കമ്പ്യൂട്ടർ ശബ്ദത്തിലാണ് വായിക്കുന്നത്.
41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.
இல்லற வாழ்வு வாழ்பவனென்று சொல்லப்படுபவன் அற இயல்பினை உடைய ஏனைய மூவர்க்கும் அவர் செல்லும் நல்ல நெறியில் நிலைபெற்ற துணையாவான்.
42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.
காப்பாற்றவேண்டிய உறவினர்களால் புறக்கணிக்கப் பட்டவர்க்கும் வறியவர்க்கும், ஆதரிப்பார் யாருமின்றித் தன்னிடம் வந்திருந்து இறந்து போனவர்க்கும் இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.
43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.
44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள் செய்யும்போது பழிக்கு அஞ்சி, அதனை ஈட்டிப் பிறரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வை ஒருவன் மேற்கொள்வானாயின் அவனது அறவழி உலகில் எப்போதும் நிலைத்து நிற்றல் அல்லாமல் அழிதல் இல்லை.
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.
ஒருவனது இல்வாழ்க்கை தன் இல்லாள்மேல் கொள்ளும் அன்பினையும், பிறரோடு பகிர்ந்து உண்ணும் அறத்தினையும் உடையதானால், அத்தகைய இல்வாழ்க்கை அதற்குப் பண்பும் பயனுமாகும்.
46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்?
ஒருவன் தன் இல்வாழ்க்கையை அறவழியிலேயே நடத்துவானானால், அவன் அதற்குப் புறமாகிய வழியில் சென்று அடையும் பயன் யாது?
47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.
இல்லறத்தில் நின்று அதற்குரிய இயல்போடு வாழ்பவன் என்று சொல்லப்படுவோன் இல்வாழ்க்கையைத் துறக்க முயல்வார் யாவருள்ளும் சிறப்புடையவன்.
48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.
தவம் செய்வாரையும் அவரவர் நெறியில் வாழத்துணை செய்து, தானும் அறத்தில் வழுவாது வாழும் இல்வாழ்க்கை, தவம் மேற்கொள்வார் நிலையினும் மேம்பட்ட பண்புடையதாகும்.
49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
இல்லறம், துறவறம் ஆகிய இரண்டில், நூல்களால் அறம் என்று சிறப்பித்துப் பேசப்படுவது இல்லறமே. துறவறமோ, பிறரால் பழிக்கப்படுவது இல்லையானால், இல்லறத்தோடு ஒத்த தன்மை உடையதாக ஏற்றுக் கொள்ளப்படும்.
50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.

അധ്യായങ്ങൾ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0 · തിരുക്കുറൾ ബഹുഭാഷാ ആപ്പായും ലഭ്യമാണ്

സംരംഭം Government of India വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ
നിർവഹണം സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ