Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Back
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

Ask the Thirukkural study companion →

← PreviousNext →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

69. தூது · The Envoy

The Tamil is read by a computer voice.
681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
அன்புடையராதலும், நல்ல குடியில் பிறந்திருத்தலும், மன்னர் விரும்பும் பண்புடையராதலும் தூது செல்வானுக்கு இலக்கணமாம்.
682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று.
தம் அரசினிடம் அன்புடைமையும், அவனுக்கு வேண்டுவன அறியும் அறிவுடைமையும், சொல்லாற்றலும் ஆகிய மூன்றும் தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்களாம்.
683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.
வேலையுடைய வேற்றரசரிடம் சென்று தன் அரசனுக்கு வெற்றிதரும் வினையைச் சொல்லுபவனுக்கு இலக்கணம், அறநூலை உணர்ந்தாரிடம் தான் அந்நூலில் வல்லவனாதல்.
684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.
அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பலராலும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் எனும் மூன்றையும் ஒருங்கே உடையவன் வேற்று வேந்தரிடம் தூது செல்லுதற்குத் தகுதி உடையவன் ஆவான்.
685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது.
வேற்றரசரிடம் சொல்லவேண்டியதைத் தொகுத்துச் சொல்லியும், இன்னாத சொற்களை நீக்கி இனிய சொற்களை மனம் மகிழச் சொல்லியும் தன் அரசனுக்கு நன்மையைச் செய்பவனே தூதனாவான்.
686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது.
அறநூல்களைக் கற்றுத் தான் சொல்லவந்ததை வேற்றரசர் மனம்கொளச் சொல்லி, அவர் கடுமையாக நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாமல் காலத்திற்கேற்ப வினைமுடிக்கத்தக்க அறிவுடையவனே தூதனாவான்.
687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை.
வேற்றரசரிடம் தான் செய்யும் முறைமை அறிந்து, உரிய காலம் பார்த்து, சொல்லுதற்கேற்ற இடம் அறிந்து, சொல்லப் போவதை முன்னமே ஆராய்ந்து சொல்லவல்லவனே தூதர்களில் சிறந்தவனாவான்.
688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.
689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.
தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.
690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது.
தன்னுயிர்க்கு இறுதி செய்யுமாயினும் அஞ்சி எச்சொல்லையும் விடாது, தன் அரசனுக்கு உறுதிபயப்பதைச் சொல்லவல்லவன் தூதனாவான்.

Chapters

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education, Government of India
Implemented by Central Institute of Classical Tamil (CICT), Chennai