கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
மொழிபெயர்ப்புகள்

22 மொழிகளில் திருக்குறள்

எட்டாம் அட்டவணை மொழிகளில் CICT-இன் மொழிபெயர்ப்புகளுடன் 1,330 குறள்கள். அதிகாரத்தையும் மொழியையும் தேர்ந்தெடுக்க.

அடுத்து →
அறத்துப்பால் · Virtue › பாயிரவியல் · Prologue

1. கடவுள் வாழ்த்து · The Praise of God

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன; அதுபோன்று உலகம் முழுமுதற் கடவுளை முதலாக உடையது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மெய்யுணர்வினை உடைய இறைவனின் நல்ல தாள்களைத் தொழவில்லையாயின், நூல்களையெல்லாம் கற்றவர்க்கு அக்கல்வி அறிவால் எப்பயனும் இல்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்மேல் சென்றவனது மாட்சிமையுடைய அடிகளை இடைவிடாது நினைப்பவர் இவ்வுலகில் நீண்டநாள் வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
எப்பொருளையும் விரும்புதலோ, வெறுத்தலோ இல்லாத இறைவனின் அடிகளை நினைப்பவர்க்கு எக்காலத்தும் துன்பங்கள் ஏற்படா.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவனின் உண்மையான புகழை எப்போதும் சொல்லுவாரிடம், யாரும் புரிந்துகொள்ள இயலாத நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் நெருங்கமாட்டா.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அறுத்தவனது மெய்யான ஒழுக்க நெறியில் வழுவாது நிற்பவர் நீண்டநாள் வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
ஒருவகையிலும் தனக்கு இணையில்லாதவனாகிய இறைவனின் அடிகளை நினைப்பவர்க்கு அல்லாது, மனத்தில் நிகழும் துன்பங்களை நீக்குதல் இயலாதது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாகிய இறைவனின் அடிகளாகிய புணையைச் சேர்ந்தவர்க்கு அல்லாது, அறம் தவிர்த்த ஏனைய கடல்களை நீந்திக்கடத்தல் இயலாததாகும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனுடைய அடிகளை வணங்காத தலைகள், தமக்கேற்ற புலன்களைக் கொள்ளாத பொறிகள் போன்று பயனற்றவை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனின் தாள்கள் என்னும் புணையையே நினைந்திருப்பார் பிறவியாகிய பெரிய கடலை நீந்தும் வலிமை பெறுவார்; அவற்றை எண்ணாதவர் பிறவிக்கடலில் நீந்த இயலாது அழுந்துவர்.

அதிகாரங்கள்

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0 · திருக்குறள் பன்மொழிச் செயலியாகவும் கிடைக்கிறது

முன்முயற்சி Government of India Ministry of Education
செயல்படுத்துவது Central Institute of Classical Tamil
இணைந்து செயல்படுவோர் Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti