திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 2. வான்சிறப்பு
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentu
தமிழ் உரை
மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.
-
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatru
தமிழ் உரை
மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhu
தமிழ் உரை
மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.
-
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukku
தமிழ் உரை
எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.
-
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Thenin
தமிழ் உரை
மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaal
தமிழ் உரை
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhai
தமிழ் உரை
உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhai
தமிழ் உரை
பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasi
தமிழ் உரை
மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitin
தமிழ் உரை
மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolal
தமிழ் உரை
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patum
தமிழ் உரை
இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
-
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patin
தமிழ் உரை
தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?
-
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaan
தமிழ் உரை
காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?
-
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serin
தமிழ் உரை
அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.
-
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Ali
தமிழ் உரை
தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkku
தமிழ் உரை
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakam
தமிழ் உரை
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
-
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kari
தமிழ் உரை
ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.
-
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpu
தமிழ் உரை
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் …”
விடை
A · வான்இன்று அமையாது ஒழுக்கு. · குறள் 20
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால் …”
விடை
C · தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. · குறள் 11
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம் …”
விடை
B · வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. · குறள் 18
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





