கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 30. வாய்மை

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.
    Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solal
    தமிழ் உரை

    வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.

  2. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.
    Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Enin
    தமிழ் உரை

    மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.

  3. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.
    Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Pira
    தமிழ் உரை

    யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.

  4. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.
    Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patum
    தமிழ் உரை

    ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.

  5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.
    Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalai
    தமிழ் உரை

    ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.

  6. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.
    Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulan
    தமிழ் உரை

    ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.

  7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.
    Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandru
    தமிழ் உரை

    ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.

  8. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
    Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutum
    தமிழ் உரை

    ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.

  9. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.
    Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharum
    தமிழ் உரை

    ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.

  10. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.
    Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakku
    தமிழ் உரை

    புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.

  11. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.
    Ozhukkamum Vaaimaiyum Naanum Im · Moondrum Izhukkaar Kutippiran Thaar
    தமிழ் உரை

    உயர்ந்த குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றிலும் வழுவமாட்டார்.

  12. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
    Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin · Vaaimai Vazhiyuraippaan Panpu
    தமிழ் உரை

    தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.

  13. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.
    Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu · Aindhusaalpu Oondriya Thoon
    தமிழ் உரை

    உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.

  14. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.
    Nakaieekai Insol Ikazhaamai Naankum · Vakaiyenpa Vaaimaik Kutikku
    தமிழ் உரை

    எக்காலத்தும் மாறுபாடு அடையாத உயர்ந்த குடியினர்க்கு முகமலர்ச்சி, உள்ளன கொடுத்தல், இன்சொல் கூறல், வறியவரை இகழாமை ஆகிய நான்கும் உரிய கூறுகளென்று நூலோர் கூறுவர்.

  15. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.
    Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram · Vaaisoraa Vanka Navan
    தமிழ் உரை

    தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.

  16. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
    Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum · Kulaththil Pirandhaarvaaich Chol
    தமிழ் உரை

    நிலத்தின் இயல்பை அதில் பிறந்த முளை காட்டும்; அதுபோல ஒருவர் பிறந்த குலத்தின் இயல்பை அவரது வாய்ச்சொல் காட்டும். நற்குடியில் பிறந்தார் இன்சொல்லே பேசல் வேண்டும்.

  17. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
    Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye · Seydhar Kariya Seyal
    தமிழ் உரை

    தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.

  18. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.
    Kokkokka Koompum Paruvaththu Matradhan · Kuththokka Seerththa Itaththu
    தமிழ் உரை

    ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.

  19. அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.
    Aruvinai Yenpa Ulavo Karuviyaan · Kaalam Arindhu Seyin
    தமிழ் உரை

    ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.

  20. காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.
    Kaalam Karudhi Iruppar Kalangaadhu · Gnaalam Karudhu Pavar
    தமிழ் உரை

    தவறாமல் உலகமெல்லாம் வெல்லக்கருதும் அரசர், வலிமை மிக்கவராயினும் அது கருதாமல், ஏற்ற காலம் வரும்வரையிலும் காத்திருப்பர்.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் …”

    1. நன்மை பயக்கும் எனின்.
    2. செய்யாமை செய்யாமை நன்று.
    3. உள்ளத்து ளெல்லாம் உளன்.
    4. தீமை இலாத சொலல்.
    விடை

    D · தீமை இலாத சொலல். · குறள் 291

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு …”

    1. தானஞ்செய் வாரின் தலை.
    2. பொய்யா விளக்கே விளக்கு.
    3. நன்மை பயக்கும் எனின்.
    4. வாய்மையின் நல்ல பிற.
    விடை

    A · தானஞ்செய் வாரின் தலை. · குறள் 295

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் …”

    1. உள்ளத்து ளெல்லாம் உளன்.
    2. நன்மை பயக்கும் எனின்.
    3. எல்லா அறமுந் தரும்.
    4. வாய்மையின் நல்ல பிற.
    விடை

    D · வாய்மையின் நல்ல பிற. · குறள் 300

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி