திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 104. உழவு
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalai
தமிழ் உரை
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappu
தமிழ் உரை
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththu
தமிழ் உரை
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavar
தமிழ் உரை
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilai
தமிழ் உரை
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitum
தமிழ் உரை
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavar
தமிழ் உரை
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavar
தமிழ் உரை
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakum
தமிழ் உரை
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patum
தமிழ் உரை
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaal
தமிழ் உரை
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakai
தமிழ் உரை
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது …”
விடை
B · எழுவாரை எல்லாம் பொறுத்து. · குறள் 1032
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் …”
விடை
A · விட்டேம்என் பார்க்கு நிலை. · குறள் 1036
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் …”
விடை
C · நீரினும் நன்றதன் காப்பு. · குறள் 1038
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





