திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 30. வாய்மை
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam Ulan
தமிழ் உரை
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha Solal
தமிழ் உரை
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai Nandru
தமிழ் உரை
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla Pira
தமிழ் உரை
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap Patum
தமிழ் உரை
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin Thalai
தமிழ் உரை
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum Enin
தமிழ் உரை
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich Chutum
தமிழ் உரை
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun Tharum
தமிழ் உரை
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke Vilakku
தமிழ் உரை
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.Oonutai Echcham Uyirkkellaam Veralla · Naanutaimai Maandhar Sirappu
தமிழ் உரை
உணவும் உடையும், பிறவும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பு அவையல்ல; நாண் உடைமையே.
-
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.Viliyumen Innuyir Verallam Enpaar · Aliyinmai Aatra Ninaindhu
தமிழ் உரை
முன்பெல்லாம் நாம் இருவரும் ஒருவரே, வேறல்லர் என்று சொல்லியவரது அன்பின்மையை மிகவும் நினைத்து என் உயிர் கழிகின்றது. அது அவ்வாறு கழிவது பிரிவினால் அன்று; அவரது அன்பின்மை காரணமாகவே.
-
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum · Nanjunpaar Kallun Pavar
தமிழ் உரை
உறங்குவார் இறந்தவரிடமிருந்து வேறுபட்டாரானாலும், வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்; அவ்வாறே, கள்ளுண்பார் நஞ்சுண்பாரிடமிருந்து வேறுபட்டாரானாலும் எக்காலத்தும் அறிவின்மையால் வேறுபட்டவராகக் கருதப்படமாட்டார்.
-
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.Vilindhaarin Verallar Mandra Thelindhaaril · Theemai Purindhu Ozhuku Vaar
தமிழ் உரை
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
-
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan · Veraakum Maandhar Palar
தமிழ் உரை
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் …”
விடை
C · தீமை இலாத சொலல். · குறள் 291
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை …”
விடை
C · வாய்மையால் காணப் படும். · குறள் 298
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் …”
விடை
A · வாய்மையின் நல்ல பிற. · குறள் 300
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





