கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 31. வெகுளாமை

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
    Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandru
    தமிழ் உரை

    பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.

  2. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.
    Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunai
    தமிழ் உரை

    அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.

  3. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.
    Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Enin
    தமிழ் உரை

    ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.

  4. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
    Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varum
    தமிழ் உரை

    சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.

  5. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.
    Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Pira
    தமிழ் உரை

    ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.

  6. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.
    Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutum
    தமிழ் உரை

    சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.

  7. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.
    Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Pira
    தமிழ் உரை

    ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.

  8. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
    Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinam
    தமிழ் உரை

    தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.

  9. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
    தமிழ் உரை

    சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.

  10. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?
    Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?
    தமிழ் உரை

    தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?

  11. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.
    Irappaan Vekulaamai Ventum Nirappitumpai · Thaaneyum Saalum Kari
    தமிழ் உரை

    ஈவான் ஒருவனிடம் இரப்பான் ‘இவன் எனக்கு ஒன்றும் ஈயவில்லை’ என்று சினம் அடைதல் கூடாது. வறுமையாகிய தான் படும் துன்பமே அதற்குச் சான்றாகும்; வேறு சான்று வேண்டியதில்லை.

  12. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.
    Kunamennum Kundreri Nindraar Vekuli · Kanameyum Kaaththal Aridhu
    தமிழ் உரை

    நற்பண்புகளாகிய குன்றின்மேல் நிற்கும் துறவியரின் சினம், அது நின்று நிலைக்கும் அளவு ஒருகணமேயானாலும், வெகுளப் பட்டவர்களால் அதைத்தடுத்து நிறுத்தி, அதிலிருந்து தப்பித்தல் இயலாததாகும்.

  13. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.
    Kaamam Vekuli Mayakkam Ivaimundran · Naamam Ketakketum Noi
    தமிழ் உரை

    மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.

  14. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.
    Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum · Yaanganum Yaarkkum Elidhu
    தமிழ் உரை

    ஒருவன் சினத்தினின்று நீங்காதவனாய், நிறையற்றவனாய் இருப்பின், அவனோடு போரிட்டு வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும்.

  15. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.
    Kallaan Vekulum Siruporul Egngnaandrum · Ollaanai Ollaa Tholi
    தமிழ் உரை

    அறநூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை விரும்பாதவனை எப்போதும் புகழ் விரும்பி அடையாது.

  16. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.
    Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar · Sirandhamaindha Seeraar Serin
    தமிழ் உரை

    மிக்க தவத்தினை உடையார் சினம்கொள்வாரானால், அவரால் வெகுளப்பட்ட அரசர், அரண், படை, பொருள், நட்பு என்னும் பெரிய துணைகளைக் கொண்டவராயினும் உய்தற்கு வழியில்லை.

  17. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.
    Yaantuch Chendru Yaantum Ularaakaar · Vendhuppin Vendhu Serappat Tavar
    தமிழ் உரை

    பகைவர்க்குத் தீங்கு செய்யும் கொடிய வலிமையினை உடைய வேந்தனால் பகைக்கப்பட்ட அரசர், அவனிடமிருந்து தப்பி எங்கேபோய் வாழ்வார்? ஓரிடத்தும் வாழமாட்டார்.

  18. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.
    Perungotaiyaan Penaan Vekuli Avanin · Marungutaiyaar Maanilaththu Il
    தமிழ் உரை

    ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.

  19. இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
    Irandha Vekuliyin Theedhe Sirandha · Uvakai Makizhchchiyir Sorvu
    தமிழ் உரை

    அளவற்ற உவகைக் களிப்பால்வரும் சோர்வு அளவு கடந்த சினத்தினும் தீதாகும்.

  20. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.
    Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serin
    தமிழ் உரை

    அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் …”

    1. புணரின் வெகுளாமை நன்று.
    2. தன்னையே கொல்லுஞ் சினம்.
    3. காக்கின்என் காவாக்கால் என்?
    4. உள்ளான் வெகுளி எனின்.
    விடை

    D · உள்ளான் வெகுளி எனின். · குறள் 309

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் …”

    1. பகையும் உளவோ பிற.
    2. தன்னையே கொல்லுஞ் சினம்.
    3. துறந்தார் துறந்தார் துணை.
    4. இல்அதனின் தீய பிற.
    விடை

    A · பகையும் உளவோ பிற. · குறள் 304

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் …”

    1. தன்னையே கொல்லுஞ் சினம்.
    2. புணரின் வெகுளாமை நன்று.
    3. நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    4. உள்ளான் வெகுளி எனின்.
    விடை

    B · புணரின் வெகுளாமை நன்று. · குறள் 308

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி