Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous
100. பண்புடைமை · Courtesy
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பண்புடைமை என்னும் வழக்கு.
யாவரிடமும் எளிய செவ்வியரானால், பண்புடைமையென்னும் நன்னெறியில் ஒழுகுதல் எளிதென்று நூலோர் கூறுவர்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்புடைமை, நற்குடியில் பிறத்தல் ஆகிய இரண்டும் பண்புடைமை என்று உலகோர் சொல்லும் நல்ல நெறியாகும்.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
உடலால் ஒத்திருத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பு ஆகாது; நிலைத்திருக்கும் பண்புகளால் தன் மக்களோடு ஒத்திருத்தலே ஒப்பாகும்.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
பண்புபா ராட்டும் உலகு.
நீதியையும் அறத்தையும் விரும்புவதால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுவாரது பண்பை உலகத்தார் போற்றுவர்.
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
பண்புள பாடறிவார் மாட்டு.
பிறர் தன்னை இகழ்தல் ஒருவனுக்கு விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; ஆதலால், பிறர் பாடறிந்து ஒழுகுவாரிடம் பகைமை உள்ளபோதும் அந்த இகழ்ச்சி தோன்றாது; இனிய பண்புகளே உள்ளனவாகும்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
மண்புக்கு மாய்வது மன்.
பண்புடையாரிடம் இருத்தலால் உலகியல் எப்போதும் உள்ளதாகும்; பண்புடையாரிடம் இல்லையானால் அது மண்ணில் புகுந்து மாய்ந்துபோகும். பண்புடையார் இல்லையேல், உலகியல் ஒருசார்பும் இல்லாமல் அழியும்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
மக்கட்பண்பு இல்லா தவர்.
நன்மக்கட்கு உரிய பண்பற்றவர் அரம்போன்ற கூர்மைகொண்ட அறிவு உடையவராயினும் மரத்தினை ஒப்பர்.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்புணர்வு இல்லாது பகைமைகொண்டு தீங்கைச் செய்வாரிடமும் தாம் பண்புடையராக ஒழுகாமை அறிவுடையார்க்கு இழுக்காகும்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
பகலும்பாற் பட்டன்று இருள்.
பண்பு இல்லாமையால் யாவரோடும் கலந்து உள்ளம் மகிழ்தல் இயலாதவர்க்கு மிகப்பெரிய உலகம் பகலிலும் இருள் அடைந்ததுபோலாம்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
கலந்தீமை யால்திரிந் தற்று.
நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, நல்ல ஆவின்பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் குறையால் கெட்டதுபோலாம். அச்செல்வம் யாருக்கும் பயன்படாதுபோகும்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



