Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous
101. நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
செத்தான் செயக்கிடந்தது இல்.
தன் இல்லமெல்லாம் நிறையக்கூடிய பெரும்பொருளைச் சேர்த்து வைத்து அதனைத் துய்க்காதவன் அப்பொருளிடம் அவனுக்கு உரிமையேதும் இல்லாமையால் செத்தவனை ஒத்தவனாவான்.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மருளானாம் மாணாப் பிறப்பு
பொருள் உண்டானால் அதனால் எல்லாம் உண்டாகும் என்று எண்ணி அதனைச் சேர்த்துப் பின்னர் யார்க்கும் ஈயாத மயக்கத்தால் ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பே உண்டாகும்.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
தோற்றம் நிலக்குப் பொறை.
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
நச்சப் படாஅ தவன்.
ஒருபொருளும் யாருக்கும் கொடாமையால் யாராலும் விரும்பப்படாதவன், தான் இறந்தபின் இவ்வுலகில் இருப்பதாக எதனைக் கருதுவான்?
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
கோடியுண் டாயினும் இல்.
பிறர்க்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய இரண்டு செயல்களும் அற்றவர்க்குப் பலவாகிய அடுக்கிய கோடி செல்வம் இருப்பினும் ஒன்றும் இல்லாததுபோலாம்.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
ஈதல் இயல்பிலா தான்.
தானும் துய்க்காது, தக்கவர்க்கு ஒன்று ஈயும் இயல்பும் இல்லாதவன், செல்வத்திற்கு ஒரு நோயாவான்.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
பெற்றாள் தமியள்மூத் தற்று.
ஒருபொருளும் இல்லாதவர்க்கு ஒன்றும் கொடுக்காதவனது செல்வம் வீணாதல், மிக்க நலத்தினைப்பெற்ற பெண்ணொருத்தி கொடுப்பார் இல்லாமையால் கொழுநன் இல்லாமல் தமியளாய் மூத்ததற்கு ஒப்பாகும்.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
நச்சு மரம்பழுத் தற்று.
வறியவர்க்கு அருகில் இருந்தும் ஒன்றும் ஈயாமையால் அவரால் விரும்பப்படாதவன் செல்வம், ஊர் நடுவில் இருக்கும் நச்சுமரம் பழுத்தாற்போன்றது.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
சுற்றத்தார், நண்பர்மேல் அன்பு கொள்ளாது, அவர்க்கு ஏதும் ஈயாது, தானும் துய்க்காது வறியவர்க்கு ஈதல் எண்ணும் அறத்தை நினைப்பதும் செய்யாது சேர்த்துவைத்த ஒள்ளிய பொருளைப் பிறர் கைப்பற்றுவர்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
வறங்கூர்ந் தனையது உடைத்து.
புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



