शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
अभी आवेदन करें
अनुवाद

22 भाषाओं में तिरुक्कुरल

आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।

← पिछलाअगला →
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love

111. புணர்ச்சி மகிழ்தல் · Rejoicing in the Embrace

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் துய்க்கப்படும் ஐம்புலன்களும் ஒள்ளிய வளையலணிந்த இவளிடம் உள்ளன.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
பிணிகளுக்கு மருந்தாவன பிணிகளிலிருந்து வேறுபட்ட தன்மை உடைய பொருள்களாம்; ஆனால், இவ்வழகிய அணிகளை உடையவளால் உண்டாகும் நோய்க்கு அவளே மருந்தாவாள்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
தாம் விரும்பும் மகளிரின் தோளில் துயிலும் துயிலைக் காட்டிலும் தாமரைக் கண்ணானின் உலகம் இனியதாகுமோ?
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
தன்னைவிட்டு அகன்றால் சுடுவதும் தன்னை நெருங்கினால் குளிருவதும் ஆகிய தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
எப்பொழுதும் பெற்றுப் புணர்ந்தாலும் பூவணிந்த தழைந்த கூந்தலினை உடையவளுடைய தோள்கள், தாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபோது தாமே வந்து இன்பம் தருதல்போல் இன்பம்தரும்.
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
இவளைப் பெறாது வாடிய என் உயிர் பெறும்போதெல்லாம் தளிர்க்கும் வகையில் தீண்டுதலால், இவளுடைய தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டவையாகும்
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
அழகிய மாமை நிறம்கொண்ட பெண்ணின் தழுவல், தமக்குரிய இல்லத்திலிருந்து உலகத்தவர் தம்முயற்சியால் வந்த பொருளை யாவர்க்கும் பங்கிட்டுக்கொடுத்துத் தமது பங்கை உண்ணுவதுபோல்வது.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
சற்றும் நெகிழாமையினால் காற்றால் இடையறுக்கப்படாத தழுவல், ஒருவரையொருவர் விரும்பும் காதலர் இருவர்க்கும் இனியதாகும்.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
ஊடுதல், அதனை அளவறிந்து நீக்குதல், அதன் பின் நிகழும் புணர்ச்சி ஆகியவை காமத்தை இடைவிடாது பெற்றவர் அடையும் பயன்களாகும்.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
சிவந்த அணிகலன்களை உடையவளை இடைவிடாது சேரச்சேர இவளிடம் வளரும் காதல், நூல்களாலும் நுண்ணுணர்வாலும் மேலும் மேலும் அறிய அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படும்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध

पहल Government of India Ministry of Education
कार्यान्वयन Central Institute of Classical Tamil
सहयोग Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti