ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ
22 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ
ᱡᱚᱛᱚ 1,330 ᱠᱩᱨᱚᱞ, 8 ᱟᱱᱟᱜ ᱚᱱᱩᱥᱩᱪᱤ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚᱛᱮ CICT ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶ ᱾ ᱢᱤᱫ ᱚᱫᱷᱭᱟᱭ ᱟᱨ ᱢᱤᱫ ᱯᱟᱹᱨᱥᱤ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ ᱾
ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱠᱩᱞᱤ ᱢᱮ →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue
15. பிறனில் விழையாமை · Not coveting another's Wife
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறன் ஒருவனுக்குப் பொருளாகும் தன்மையுடைய பெண்ணைக் காமுற்று நடக்கின்ற அறியாமை உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவரிடம் இல்லை.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.
காமம் காரணமாக அறமற்ற தீயொழுக்கத்தை மேற்கொண்ட பலருள்ளும் பிறன் மனைவியைக் காமுற்று அவன் வாயிலில் சென்று நின்றவரைப்போன்ற மூடர்கள் இல்லை.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.
தம்மைப்பற்றி ஐயம்கொள்ளாதவரின் இல்லாளை விரும்பித் தீமைசெய்து நடப்பவர் உயிருடையவர் என்றாலும் இறந்தவரே ஆவர்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.
எத்துணைப் பெருமையுடையவனாக இருந்தாலும் ஒருவனுக்குக் காம மயக்கத்தால் தினையளவும் தன் பிழையை உணராமல் பிறனது இல்லத்தில் புகுதல் எவ்வாறு இயலும்?
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
அடைதல் எளிதென்று எண்ணிப் பின்விளைவு கருதாமல் பிறன் மனைவியிடம் நெறிகடந்து சேர்வான், எப்போதும் அழியாது நிலைத்து நிற்கும் குடிப்பழியினை அடைவான்.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பிறன் இல்லாளிடம் நெறிதவறி நடப்பவனிடமிருந்து, பகை, பாவம், அச்சம், குடிப் பழியெனும் நான்கு குற்றங்களும் ஒருபோதும் நீங்கா.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.
அறமாகிய இயல்போடுகூடி இல்வாழ்வான் எனப்படுபவன் பிறனுக்கு உரியவளாக, அவனுடைய இயல்பில் நிற்பவளின் பெண்தன்மையை விரும்பாதவன்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறன் மனையாளை விரும்பி நோக்காத ஆண்தகைமை சான்றோர்க்கு அறம் மட்டுமன்றி நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
அச்சம்தரும் கடலால் சூழப்பட்ட உலகில் எல்லா நலன்களையும் அடைதற்குரியவர் யாவரென்றால், பிறன் ஒருவனுக்கு உரிமைபூண்டவளின் தோள்களைச் சேராதவரே.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.
ஒருவன் அறத்தைச் செய்யாது அறமல்லவற்றைச் செய்தாலும் பிறனொருவன் எல்லையில் நிற்பவளது பெண்மையை விரும்பாதிருத்தல் நல்லது.
ᱚᱫᱷᱭᱟᱭ ᱠᱚ
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0 · ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱢᱟᱞᱴᱤᱞᱤᱝᱜᱩᱣᱟᱞ ᱮᱯ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱼᱟ





