Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue
30. வாய்மை · Veracity
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
தீமை இலாத சொலல்.
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
நன்மை பயக்கும் எனின்.
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
உள்ளத்து ளெல்லாம் உளன்.
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
தானஞ்செய் வாரின் தலை.
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
எல்லா அறமுந் தரும்.
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
செய்யாமை செய்யாமை நன்று.
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
வாய்மையால் காணப் படும்.
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
பொய்யா விளக்கே விளக்கு.
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
வாய்மையின் நல்ல பிற.
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



