Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue
35. துறவு · Renunciation
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
அதனின் அதனின் இலன்.
ஒருவன் எவ்வெப் பொருள்களிலிருந்து விலகுகின்றானோ அவ்வப் பொருள்களால் அவன் துன்பம் அடைவதில்லை.
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
ஈண்டுஇயற் பால பல.
எல்லாப் பொருள்களையும் துறந்தால் இவ்வுலகில் ஒருவர்க்குக் கிடைக்கும் இன்பங்கள் பல. அவற்றை விரும்பினால் இளமையிலேயே துறத்தல் வேண்டும்; அதனால், நீண்டகாலம் முறையான இன்பங்களைத் துய்த்தல் கூடும்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
செவி முதலிய ஐம்பொறிகளுக்கு உரியவையான ஓசை முதலிய ஐம்புலன்களையும் ஒருவன் கெடுத்தல் வேண்டும்; துய்த்தல் வேண்டித் தாம் சேர்த்த பொருள் முழுவதையும் விடுதல் வேண்டும்.
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
மயலாகும் மற்றும் பெயர்த்து.
தவம் செய்யும் துறவிகளுக்கு விரும்பப்படும் பொருள் ஒன்றும் இல்லாமை இயல்பாகும். அவ்வாறின்றி, ஒரு பொருளை உடையவராக இருந்தாலும் அது மீண்டும் மயங்குதற்கு ஏதுவாகும்.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறப்பறுத்தலை வேண்டுவார்க்கு அதற்குக் கருவியாகிய உடம்பும் மிகையாம். அவ்வாறிருக்க, அதற்குமேலே இயைபில்லாத சில தொடர்ப்பாடுகள் உளவாதல் என்னாம்?
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
உயர்ந்த உலகம் புகும்.
உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.
பற்றி விடாஅ தவர் க்கு.
பற்றினை இறுகப்பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்கள் பற்றிக்கொண்டு விடமாட்டா.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
வலைப்பட்டார் மற்றை யவர்.
முற்றும் துறந்தவர் வீடுபேற்றிற்கு உரியராவர்; அங்ஙனம் துறவாதவர் மயங்கிப் பிறப்பாகிய வலையுள் அகப்படுவர்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
நிலையாமை காணப் படும்.
ஒருவன் இருவகைப் பற்றுகளையும் விட்டவுடன் அவ்வுறுதியானது அவன் பிறப்பை அறுக்கும்; அப்பற்றுகள் நீங்காதபோது பிறப்பும் இறப்பும் வருகின்ற நிலையாமையை எதிர்கொள்ள வேண்டும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றுக பற்று விடற்கு.
பற்றற்ற இறைவனைச் சேரும் நெறியே நன்னெறியென்று உள்ளத்துள் கொள்க; விடாது தொடரும் பற்றை விடுதற்கு அப்பற்றைப் பற்றிக்கொள்ளுதல் நன்று.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



