ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ · ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
ಕಾಶಿ ತಮಿಳು ಸಂಗಮಂ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ · ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಇಂಟರ್‌ಫೇಸ್‌ನ ಈ ಅನುವಾದವು ಕರಡು ರೂಪದಲ್ಲಿದ್ದು, CICT ಇದನ್ನು ಪರಿಶೀಲಿಸುತ್ತಿದೆ. English
ಹಿಂದಕ್ಕೆ
ಅನುವಾದಗಳು

22 ಭಾಷೆಗಳಲ್ಲಿ ತಿರುಕ್ಕುರಳ್

ಸಂವಿಧಾನದ ಎಂಟನೇ ಅನುಸೂಚಿಯ ಭಾಷೆಗಳಲ್ಲಿ CICT ಅನುವಾದಗಳೊಂದಿಗೆ ಎಲ್ಲ 1,330 ಕುರಳ್‌ಗಳು. ಅಧ್ಯಾಯ ಮತ್ತು ಭಾಷೆಯನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ.

ತಿರುಕ್ಕುರಳ್ ಅಧ್ಯಯನ ಸಂಗಾತಿಯನ್ನು ಕೇಳಿ →

← ಹಿಂದಿನದುಮುಂದಿನದು →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

45. பெரியாரைத் துணைக்கோடல் · Seeking the Aid of Great Men

ತಮಿಳು ಪಠ್ಯವನ್ನು ಕಂಪ್ಯೂಟರ್ ಧ್ವನಿ ಓದುತ್ತದೆ.
441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.
அறத்தின் நுட்பத்தை அறிந்து, தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பின் அருமையை உணர்ந்து, அதனை அடையும் திறம் அறிந்து, அவரைத் துணையாகக் கொள்ளல் வேண்டும்.
442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.
தனக்கு வரும் துன்பங்களைத் தக்க வழியறிந்து விலக்கி, அத்தகைய துன்பங்கள் மேலும் வராமல் தடுக்கவல்ல தன்மை உடையவரை மகிழ்வித்து ஒருவன் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.
பெரியவர்களை மகிழ்விக்க வேண்டியவற்றை எல்லாம் செய்து தமக்குத் துணையாக்கிக் கொள்ளுதல் அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரிதாகும்.
444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.
அறிவு முதலியவற்றால் தம்மினும் உயர்ந்தாரைத் துணையாகக்கொண்டு, தாம் அவர் காட்டிய வழியில் நடத்தல் வலிமைகள் யாவற்றிலும் தலையாய வலிமையாகும்.
445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
அமைச்சர் தன் பணியைக் கண்போல் துணையாகக் கொண்டு நடத்தலால், அரசன் ஆற்றலுடைய அமைச்சரை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, வழிகாட்டிகளாகக் கொள்ளவேண்டும்.
446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.
அறிவு, ஒழுக்கங்களால் தகுதி உடையவரைத் துணையாகக்கொண்டு, தானும் அறிவோடு, அறநெறிகளிலிருந்து வழுவாமல் நடத்தல் வல்ல அரசனுக்குப் பகைவர் செய்யக்கூடிய துன்பம் ஏதொன்றும் இல்லை.
447
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.
தீயன கண்டபோதெல்லாம் இடித்து அறிவுரை கூறும் ஆற்றலுடைய அமைச்சர்களை இவர் நமக்குச் சிறந்தவரென்று துணையாகக்கொள்ளும் அரசரைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் உலகில் எங்கு உள்ளார்?
448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
இடித்துரைத்துக் கண்டிக்க வல்லாரைத் துணையாகப் பெறாமையால் பாதுகாவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.
449
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.
முதலில்லாமல் வணிகம் செய்வார்க்கு அதனால் கிடைக்கும் ஊதியம் ஏதுமில்லை; அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையற்ற அரசர்க்கு அரசு பணியைச் சலியாது செய்யும் நிலை இல்லை.
450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.
அரசன் பெரியாரது துணையைக் கொள்ளாது விடுதல் பலரோடு பகைமை கொள்ளுதலைக் காட்டிலும் பலமடங்கு தீமை உடையதாகும்.

ಅಧ್ಯಾಯಗಳು

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

ಅನುವಾದಗಳು © ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ, ಚೆನ್ನೈ · CC BY 4.0 · ತಿರುಕ್ಕುರಳ್ ಬಹುಭಾಷಾ ಆ್ಯಪ್ ರೂಪದಲ್ಲೂ ಲಭ್ಯ

ಉಪಕ್ರಮ Government of India ಶಿಕ್ಷಣ ಸಚಿವಾಲಯ, ಭಾರತ ಸರ್ಕಾರ
ಅನುಷ್ಠಾನ ಕೇಂದ್ರೀಯ ಶಾಸ್ತ್ರೀಯ ತಮಿಳು ಸಂಸ್ಥೆ (CICT), ಚೆನ್ನೈ