মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হনবা
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

64. அமைச்சு · The Office of Minister of state

তামিল অসি কম্প্যুটরগী খোনজেলনা পাবনি।
631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.
வினை மேற்கொள்ளும்போது தளராமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் ஆகியவற்றோடு ஐந்து அங்கங்களும் திருந்த உடையவனே அமைச்சனாவான்.
633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு.
பகைவர்க்குத் துணையாயிருப்பாரை அவரிடமிருந்து பிரித்தலும், தம்முடன் இருப்பவரைக் கொடை, இன்சொல் ஆகியவற்றால் பேணிக்கொள்ளுதலும், முன்னே பிரிந்தவரைத் தம்முடன் இணைத்துக்கொள்ளுதலும் வல்லவனே அமைச்சனாவான்.
634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு.
ஒரு செயலைச் செய்வதற்குப் பல வழிகள் இருப்பினும் தக்கதை ஆராய்ந்து அறிதலும், அது செய்யும்போது திறன் நாடிச் செய்தலும், செய்யக்கூடியது எதுவென்று துணிவுடன் சொல்லுதலும் வல்லவனே அமைச்சனாவான்.
635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
அறங்களை அறிந்து, தனக்கேற்ற கல்வியால் நிறைந்தமைந்த சொற்களை உடையவனாய், எப்போதும் வினைசெய்யும் திறங்களை அறிந்தவன் அரசர்க்கு அறிவுரை கூறும் துணையாவான்.
636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை.
நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்க்கு மிகநுட்பமுடைய சூழ்ச்சிகளென்று முன்னிற்பவை யாவை?
637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல்.
நூல்களின்மூலம் வினைசெய்யும் திறங்களை அறிந்திருந்தாலும் அமைச்சன் உலக நெறியறிந்து அதனோடு பொருந்தச் செயலாற்றல் வேண்டும்.
638
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.
அறிந்து சொல்வாரது அறிவையும் அழித்து, அரசன் தானும் அறியாதவனாய் இருப்பினும் அரசனுக்கு உறுதியானவற்றைச் சொல்லுதல் அமைச்சனது கடமையாகும்.
639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.
அருகிலிருந்து அரசனுக்குத் தீங்கிழைக்க எண்ணும் அமைச்சன் ஒருவனில் எழுபது கோடிப் பகைவர் இருப்பர்.
640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர்.
வினையை முடித்தற்கேற்ற திறனற்றவர், செய்யப்பட வேண்டியவற்றை முன்னமேயே ஆராய்ந்து எண்ணியிருந்தும் அவற்றை வெற்றியோடு செய்து முடிக்கமாட்டார்.

তাংককশিং

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
পাঙথোক্লিবা সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
খূৎ শম্নরিবা ইন্দিয়ান ইনষ্টিট্যুট ওফ টেক্নোলোজী মদ্রাসkashitamil.iitm.ac.in  বনারস হিন্দু য়ুনিভর্সিটি, বারানসীkashitamil.bhu.edu.in  ভারতীয় ভাষা সমিতি