Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

← PreviousNext →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

71. குறிப்பறிதல் · The Knowledge of Indications

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
அரசன் குறித்த செயலை அவன் கூறாமல் அவன் முகத்தாலும் கண்ணாலும் அறியும் அமைச்சன் எப்போதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகில் உள்ளவர்க்கு ஓர் அணியாகும்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
ஒருவன் மனத்தில் நிகழ்வதை ஐயப்படாது உறுதியாக உணரவல்லானைத் தெய்வத்தை ஒத்தவனாக மதித்தல் வேண்டும்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
பிறர் முகக்குறிப்பால் அவர் மனக்குறிப்பு உணரவல்லவர்களை அரசர் தம் உறுப்புகளில் ஏதாவது ஒன்றினைக் கொடுத்தாவது தமக்குத் துணையாக்கிக்கொள்ளல் வேண்டும்.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
ஒருவன் மனத்தில் எண்ணியதை அவன் கூறாமல் குறிப்பால் உணரவல்லவரோடு அதனைச் செய்யமாட்டாதார் உடல் உறுப்புகளால் ஒருதன்மையரானாலும் அறிவால் வேறுபட்டவராவர்.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
ஒருவன் உறுப்புகளில் சிறந்தனவும் குறித்தது காணவல்லவையுமான கண்கள் பிறர் குறிப்பினை உணரமாட்டாதவையானால் அவற்றால் என்ன பயன்?
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
தனக்கு முன்னிருக்கும் பொருளைத் தானே காட்டும் பளிங்குபோல் ஒருவனது நெஞ்சில் மிகுந்திருப்பதை அவன் முகம் தானே காட்டிவிடும்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
மனத்தின் கருத்தறிந்து அது மகிழுமானால் தான் மலர்ந்தும், அது துன்புறுமானால் தான் கருகியும் அதற்கு முற்பட்டு நிற்குமாதலால், முகம்போல் அறிவுமிக்கது வேறொன்றும் இல்லை.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தனது குறையைத் தீர்ப்பாரைப்பெற்றால், அவர் தன் முகம் நோக்கும் வகையில் தானும் அவர் முகம் நோக்கி நிற்றல் அரசர்க்கு அமையும்.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
வேந்தருடைய நோக்கு உவந்த நோக்கா, வெறுத்த நோக்கா என்பதைக் கண்டறியவல்ல அமைச்சரைப்பெற்றால், அவர்க்கு மனத்துள்ளிருக்கும் பகைமையையும் நட்பையும் வேற்று வேந்தர் சொல்லவில்லையாயினும் அவர் கண்களே சொல்லும்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
‘நாம் நுண்ணறிவு உடையவர்’ என்றிருக்கும் அமைச்சர், அரசர் எண்ணங்களை அளக்கும் கோலாவது, ஆராயுமிடத்து அவர்களுடைய கண்கள் அல்லாமல் பிற இல்லை.

Chapters

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education
Implemented by Central Institute of Classical Tamil
In association with Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti