शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
आतांच अर्ज करात
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

← आदलेंफुडलें →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

76. பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
ஒரு பொருளாக யாராலும் மதிக்கப்படாதவரையும் மதிக்கப்படுபவராகச் செய்யவல்ல பொருளைத்தவிர ஒருவனுக்குப் பொருளாவது வேறு எதுவும் இல்லை.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
எல்லாப் பெருமைகளும் உடையவராயினும் பொருளற்றவரை யாவரும் இகழ்வர்; எல்லாத் தீமைகளும் உடையவராயினும் செல்வரை யாவரும் மதித்துத் தாம் அவரிடம் தாழ்ந்து நிற்பர்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள் என்று எல்லாராலும் போற்றப்படும் அணையாத விளக்கு தன்னைச் சேர்ந்தவர்க்கு, அவர் நினைத்த நாட்டிற்கெல்லாம் சென்று, பகையென்னும் இருளை அழிக்கும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருள் சேர்க்கும் திறன் அறிந்து, தீச்செயல் மேற்கொள்ளாது வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் அளிக்கும்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
அருளொடும் அன்பொடும் சேர்ந்து நல்ல நெறியில் வராத பொருளீட்டத்தை ஒருவன் ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
உரிமையுடையவர் இல்லாததாய்த் தானே வந்துசேரும் பொருளும், இறையாகக் கொடுக்கப் பட்ட சுங்கப்பொருளும், பகைவரை வென்று திறையாகக் கொள்ளப்பட்ட பொருளும் ஆகிய மூன்றும் அரசனுக்குரிய பொருள்களாகும்.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
அன்பினால் பெறப்பட்ட அருள் என்னும் குழவி, பொருள் என்று பாராட்டப்படும் செல்வத்தையுடைய செவிலியால் வளரும்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன் கையில் பொருளிருப்பவன் ஒரு செயலை மேற்கொள்ளுதல், ஒருவன் மலைமேல் நின்றுகொண்டு யானைகள் போர்செய்வதைப் பார்ப்பதை ஒத்ததாகும்.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
தம் பகைவரது தருக்கினை அழிக்கும், கூரிய படைக்கலம் செல்வத்தைப்போன்று வேறொன்றும் இல்லையாதலால் ஒருவன் பொருளைப் பெருக்க வேண்டும்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
நன்னெறியால் வரும் பொருளை மிகையாகச் சேர்த்தவர்க்கு அறம், இன்பம் எனும் பிற இரண்டும் எளிதில் அடையக்கூடிய பொருள்களாகும்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India Ministry of Education
अंमलबजावणी Central Institute of Classical Tamil
सहकार्य Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti