शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
आतांच अर्ज करात
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

← आदलेंफुडलें →
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous

97. மானம் · Honour

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
இன்றியமையாச் சிறப்பினை உடையன ஆயினும் தம் குடிப்பிறப்பிற்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்தல் கூடாது.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
புகழுொடு, மானத்தையும் நிலைநிறுத்த விரும்புவார் புகழ் தருவன ஆயினும் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
நற்குடிப் பிறந்தார்க்குச் செல்வம் பெருகும்போது யாவரிடமும் பணிவு வேண்டும்; சிறிதாய வறுமை உண்டாகும்போது மேலிருந்து கீழ்நிலைக்குத் தாழாத உயர்ச்சி வேண்டும்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
நற்குடியில் பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தாழ்ந்து போவாராயின் தலையிலிருந்து கீழே விழுந்த மயிரினை ஒத்தவராவர்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
குடிப்பிறப்பால் மலைபோல் உயர்ந்தாரும் இழிவான செயல்களை ஒரு குன்றி அளவு செய்வாரானாலும் கீழ்நிலை அடைவார்.
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
ஒருவன் மானத்தைவிட்டுத் தன்னை அவமதிப்பார் பின்சென்று நிற்கும் நிலை புகழ்தராது; தேவர் உலகத்தும் செலுத்தாது. அது அவனுக்குச் செய்வது யாது?
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தன்னை இகழ்வார்பின் சென்று, பொருள்பெற்று, ஒருவன் உயிர்வாழ்தலைக்காட்டிலும் ‘இறந்துவிட்டான்’ என்று சொல்லப்படுதலே நல்லது.
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
உயர்குடிப்பிறப்பின் சிறப்பாகிய மானம் அழிய நேரும்போது இறக்காமல் பயனற்ற உடம்பினைக் காக்கும் வாழ்வானது, பின்னும் இறவாதிருத்தற்கு மருந்தாகுமா? பின்னும் இறத்தல் உறுதியாகும்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
தன் உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமானை ஒப்பார், மானம் அழிய நேர்ந்தால் அதைத் தாங்காது உயிர்நீப்பர்.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
தமக்கு இழிவு வரும்போது உயிர்வாழாது அதனை நீக்கும் மானம் உடையாரது புகழை உலகத்தார் எப்போதும் தொழுது போற்றுவர்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India Ministry of Education
अंमलबजावणी Central Institute of Classical Tamil
सहकार्य Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti