হন্দোকপশিং
লোল 22 দা তিরুক্কুরল
কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।
তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous
99. சான்றாண்மை · Perfectness
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
நமக்கு இதுவே ஏற்றதென்று சான்றாண்மையை மேற்கொண்டு ஒழுகுவார்க்கு, நல்ல பண்புகளெல்லாம் இயல்பாய் இருக்குமென்று நூலோர் கூறுவர்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
சான்றோர் நலமென்பது நற்பண்புகளாலாகிய நலமே. அதைத்தவிர்த்த உறுப்புக்களாலாகிய நலம் எந்நலத்திலும் சேர்ந்தது அன்று.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.
உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினதாம்; அதுபோலச் சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்ததாம்.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை.
ஒரு செயலைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது அதற்குத் துணையாவாரைப் பணிந்து இணைத்துக்கொள்ளுதலாம். அவ்வாறு துணையாவாரைச் சேர்த்துக்கொள்ளுதலே சால்புடையார் தம் பகைவரின் பகைமையை அழிக்கும் கருவியுமாகும்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்.
சால்பு என்னும் பொன்னின் அளவை அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதென்று கேட்டால், அது தம்மினும் தாழ்ந்தவரிடமும் தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல் ஆகும்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
சால்புடையார் தமக்குத் துன்பம் செய்தாருக்கும் இனியவற்றைச் செய்யவில்லையானால், அச்சால்பு என்ன பயனை உடையது?
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்திண்மை உண்டாகப் பெறின்.
சால்பு என்று சொல்லப்படும் ஆற்றல் உண்டாகப்பெற்றால் ஒருவனுக்கு வறுமை இழிவாகாது.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.
சால்புடைமையாகிய கடலுக்குக் கரையென்று சொல்லப்படுவார் காலம் திரிந்தாலும் தாம் திரியமாட்டார்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
তাংককশিং
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই





