Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 9. விருந்தோம்பல் · Hospitality
The couplets closest to your question
-
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.Utaimaiyul Inmai Virundhompal Ompaa · Matamai Matavaarkan UntuThe man of wealth is poor indeed
Whose folly fails the guest to feed.Tamil commentary
பொருள் உடைய காலத்திலும் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; அது அறிவுடையாரிடம் இல்லாதது; பேதையரிடம் உள்ளதாம்.
-
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.Inaiththunaith Thenpadhon Rillai Virundhin · Thunaiththunai Velvip PayanWorth of the guest of quality
Is worth of hospitality.Tamil commentary
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று சொல்லக்கூடிய அளவினது அன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவாகும்.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu · Nokkak Kuzhaiyum VirundhuAnicham smelt withers: like that
A wry-faced look withers the guest.Tamil commentary
அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.
-
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi · Velaanmai Seydhar PoruttuMen set up home, toil and earn
To tend the guests and do good turn.Tamil commentary
இல்லாளோடு காட்டிற்குச் செல்லாது இல்லத்திலிருந்து வாழும் வாழ்வானது, விருந்தினரைப் பேணி அவருக்கு நன்மை செய்தற்கேயாம்.
-
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்.Viththum Italventum Kollo Virundhompi · Michchil Misaivaan PulamShould his field be sown who first
Feeds the guests and eats the rest?Tamil commentary
விருந்தினருக்கு உணவளித்துப் பின் எஞ்சியதைத்தான் உண்பானது நிலத்திற்கு வித்திடுதல் வேண்டுமோ? வேண்டா. விருந்தோம்புவானது நிலம் தானே விளையும்.
-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath ThavarkkuWho tends a guest and looks for next
Is a welcome guest in heaven's feast.Tamil commentary
தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.
-
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa · Marundheninum Ventarpaar RandruTo keep out guests cannot be good
Albeit you eat nectar-like food.Tamil commentary
உண்ணப்படும் பொருள் இறவாமைக்குக் காரணமாகிய மருந்தென்றாலும், விருந்தினர் இல்லத்தின் புறத்தே காத்திருக்கத் தானே உண்ணுதல் விரும்பத்தக்கது அன்று.
-
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.Parindhompip Patratrem Enpar Virundhompi · Velvi Thalaippataa ThaarWho loathe guest-service one day cry:
"We toil and store; but life is dry".Tamil commentary
விருந்தினரைப் பேணி வேள்விப் பயனை அடையும் முயற்சியை மேற்கொள்ளாதவர், ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் அதனையிழந்து நாங்கள் இப்போது பற்றற்றவர் ஆயினோம் என்று பின்பு இரங்குவர்.
-
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai · Paruvandhu Paazhpatudhal IndruWho tends his guests day in and out
His life in want never wears out.Tamil commentary
தன்னிடம் வந்த விருந்தை நாள்தோறும் பேணுபவனின் இல்வாழ்க்கை வறுமையால் வருந்திக் கெடுதல் இல்லை.
-
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu · Nalvirundhu Ompuvaan IlThe goddess of wealth will gladly rest
Where smiles welcome the worthy guest.Tamil commentary
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுவானின் இல்லத்தில் திருமகள் மனமகிழ்ந்து வாழ்வாள்.
-
காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku · Yaadhusey Venkol VirundhuHow shall I feast this dream-vision
That brings the beloved's love-mission?Tamil commentary
நான் வருந்துவது அறிந்து அது தீர்தற்குக் காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டுவந்த கனவினுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp PoraiNeglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.Tamil commentary
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu · Maalai Ayarkam VirundhuMay the king fight and win and give
And with my wife I will feast this eve!Tamil commentary
அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.
-
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu · Aimpulaththaaru Ompal ThalaiBy dutiful householder's aid
God, manes, kin, self and guests are served.Tamil commentary
தென்திசையார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவரிடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறப்புடைய அறமாகும்.
-
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.Urannasaii Ullam Thunaiyaakach Chendraar · Varalnasaii Innum UlenWill as guide he went to win
Yet I live-to see him again.Tamil commentary
இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
-
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal · Nenjaththar Aavar ViraindhuAsleep he embraces me fast;
Awake he enters quick my heart.Tamil commentary
காதலர் நான் உறங்கும்பொழுது வந்து என் தோளைத் தழுவியிருந்து பின் விழிக்கும்பொழுது விரைந்து என் நெஞ்சத்தை அடைவார். ஒருகாலும் அவர் என்னைவிட்டு நீங்கார்.
-
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith ThunaiA good housewife befits the house,
Spending with thrift the mate's resource.Tamil commentary
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
-
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.Vaalatrup Purkendra Kannum Avarsendra · Naalotrith Theyndha ViralMy eyes are dim lustre-bereft
Worn fingers count days since he left.Tamil commentary
காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.
-
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku · Uyalunmai Saatruven ManI beg these fish-like dark eyes sleep
To tell my lover how life I keep.Tamil commentary
உறங்காது வருந்துகின்ற என் கயல்போலும் மையுண்ட கண்கள் நான் வேண்டிக்கொண்டால் உறங்குமானால், கனவில் காதலரைக் காண்பேன்; கண்டால் அவரிடம் நான் எவ்வாறு காமநோய்க்குத் தப்பி, ஆற்றியுள்ளேன் என்பதை விரிவாகச் சொல்வேன்?
-
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun · Erupol Peetu NataiA cuckold has not the lion-like gait
Before his detractors aright.Tamil commentary
புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“Worth of the guest of quality …”
Answer
A · Is worth of hospitality. · Couplet 87
-
Choose the correct second line of this couplet.
“Should his field be sown who first …”
Answer
D · Feeds the guests and eats the rest? · Couplet 85
-
Choose the correct second line of this couplet.
“Men set up home, toil and earn …”
Answer
C · To tend the guests and do good turn. · Couplet 81
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





