திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 104. உழவு
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam Poruththu
தமிழ் உரை
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel Pavar
தமிழ் உரை
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave Thalai
தமிழ் உரை
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku Nilai
தமிழ் உரை
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
-
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu · Kaiseydhoon Maalai Yavar
தமிழ் உரை
தம் கையால் உழுதுண்டலைச் செய்யும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரக்கமாட்டார்; தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய ஒன்றை மறைக்காது கொடுப்பர்.
-
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.Ilamendru Asaii Iruppaaraik Kaanin · Nilamennum Nallaal Nakum
தமிழ் உரை
‘யாம் வறுமை உடையவர்’ என்று கூறிச் சோம்பியிருப்பாரைப் பார்த்தால் நிலமகள் என்று போற்றப்படும் நல்லவள் தன்னுள்ளே நகைசெய்வாள்.
-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar · Alakutai Neezha Lavar
தமிழ் உரை
உழுதொழிலால் நெல்லினை உடையவராய், இரப்போர்க்கு ஈயும் தண்ணளி உடையார், பல வேந்தர்களின் குடைநிழலில் உள்ள நிலம் முழுவதையும் தம் வேந்தனின் குடையின் கீழ்க்காண்பர்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan Kaappu
தமிழ் உரை
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.Sellaan Kizhavan Iruppin Nilampulandhu · Illaalin Ooti Vitum
தமிழ் உரை
நிலத்திற்கு உரியவன் அதை நாள்தோறும் சென்று பார்த்துச் செய்யவேண்டியதைச் செய்யாது இருந்தால் அந்நிலமானது அவனுடைய மனைவிபோல ஊடுதலைச் செய்யும்.
-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum · Ventaadhu Saalap Patum
தமிழ் உரை
நிலத்தை உழுபவன் ஒருபலம் அளவுள்ள புழுதியைக் கால்பலமாகக் குறையும்வண்ணம் அதனைக் காயவிடுவானானால், அந்நிலத்தில் விளையும் பயிர் ஒருபிடியில் அடங்கும் எருவும் வேண்டாமல் மிக்க விளைச்சலைத் தரும்.
-
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.Viller Uzhavar Pakaikolinum Kollarka · Soller Uzhavar Pakai
தமிழ் உரை
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
-
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaal
தமிழ் உரை
மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.
-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach · Chelvarum Servadhu Naatu
தமிழ் உரை
குறையாத விளையுளைச் செய்யும் உழவரும், சான்றோரும், கேடில்லாத செல்வத்தை உடையவரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh · Kalaikat Tadhanotu Ner
தமிழ் உரை
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhai
தமிழ் உரை
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது …”
விடை
D · கைசெய்தூண் மாலை யவர். · குறள் 1035
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் …”
விடை
A · விட்டேம்என் பார்க்கு நிலை. · குறள் 1036
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் …”
விடை
D · தொழுதுண்டு பின்செல் பவர். · குறள் 1033
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





