கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 62. ஆள்வினை உடைமை

பிற அதிகாரங்களிலும்: 103. குடிசெயல் வகை

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.
    Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhi
    தமிழ் உரை

    நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.

  2. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
    Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukku
    தமிழ் உரை

    எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.

  3. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.
    Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharum
    தமிழ் உரை

    ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.

  4. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulaku
    தமிழ் உரை

    வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.

  5. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.
    Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharum
    தமிழ் உரை

    நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.

  6. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.
    Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketum
    தமிழ் உரை

    முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.

  7. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
    Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitum
    தமிழ் உரை

    ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.

  8. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.
    Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naal
    தமிழ் உரை

    கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.

  9. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoon
    தமிழ் உரை

    தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.

  10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.
    Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavar
    தமிழ் உரை

    செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.

  11. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.
    Aalvinaiyum Aandra Arivum Enairantin · Neelvinaiyaal Neelum Kuti
    தமிழ் உரை

    முயற்சி, நிறைந்த அறிவு ஆகிய இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனது குடி உயரும்.

  12. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
    Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith · Thaazhaadhu Ugnatru Pavarkku
    தமிழ் உரை

    தம்குடியை உயர்த்த விரைந்து முயல்பவர்க்கு அதுபற்றி அவர் ஆராய வேண்டாமல் தானே முடிவுறும்.

  13. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
    Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha · Illaanmai Aakkik Kolal
    தமிழ் உரை

    ஒருவனுக்கு உயர்ந்த ஆண்மையென்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியில் உள்ளவர்களை உயரச்செய்து தன்வழிப்படுத்திக்கொள்ளுதல் ஆகும்.

  14. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.
    Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum · Patupayanum Paarththuch Cheyal
    தமிழ் உரை

    வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.

  15. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.
    Karumam Seyaoruvan Kaidhooven Ennum · Perumaiyin Peetutaiyadhu Il
    தமிழ் உரை

    தன் குடியை உயர்த்தற்குத் தொடங்கிய செயலை முடிக்காதுவிடேன் என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்குச் சிறப்பான பெருமை வேறு எதுவும் இல்லை.

  16. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.
    Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum · Iruldheera Ennich Cheyal
    தமிழ் உரை

    ஒரு செயலை மேற்கொள்ளும்போது பொருள், கருவி, வினை, காலம், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமின்றி, பிழையாமல் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

  17. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.
    Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu · Aindhutan Maantadhu Amaichchu
    தமிழ் உரை

    வினை மேற்கொள்ளும்போது தளராமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் ஆகியவற்றோடு ஐந்து அங்கங்களும் திருந்த உடையவனே அமைச்சனாவான்.

  18. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.
    Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul · Pokoozhaal Thondrum Mati
    தமிழ் உரை

    ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய ஊழால் முயற்சி உண்டாகும், சோம்பல் நீங்கும்; பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாகும்.

  19. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.
    Pariyinum Aakaavaam Paalalla Uyththuch · Choriyinum Pokaa Thama
    தமிழ் உரை

    தனக்கு ஊழல்லாத பொருள்களை ஒருவன் வருந்திக் காப்பாற்றினாலும் அவனிடத்து அப்பொருள்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஊழால் தனதாகிய பொருள்களை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை தன்னைவிட்டுப்போகா.

  20. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap · Perththulla Ventaa Pirappu
    தமிழ் உரை

    அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து …”

    1. இன்மை புகுத்தி விடும்.
    2. ஆள்வினை இன்மை பழி.
    3. பெருமை முயற்சி தரும்.
    4. மெய்வருத்தக் கூலி தரும்.
    விடை

    B · ஆள்வினை இன்மை பழி. · குறள் 618

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் …”

    1. துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    2. இன்மை புகுத்தி விடும்.
    3. மெய்வருத்தக் கூலி தரும்.
    4. தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    விடை

    C · மெய்வருத்தக் கூலி தரும். · குறள் 619

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே …”

    1. தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    2. பெருமை முயற்சி தரும்.
    3. வேளாண்மை என்னுஞ் செருக்கு.
    4. துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    விடை

    C · வேளாண்மை என்னுஞ் செருக்கு. · குறள் 613

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி